12 நிமிட பேச்சில்.. "பாஜக" இந்த வார்த்தையே விஜய் வாயில் இருந்து வரவில்லை.. தவெக கணக்கு என்ன?
புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் 12 நிமிட பேச்சில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் முதல்வர் ரங்கசாமி மீது எந்தவொரு விமர்சனமும் முன் வைக்காதது பேசுபொருளாகி இருக்கிறது. திமுக மற்றும் மத்திய அரசு குறித்து கடுமையாக விமர்சித்த விஜய், ஆட்சியில் இருக்கும் ரங்கசாமியை பாராட்டி இருக்கிறார். அதேபோல் தமிழக அரசை திமுக அரசு என்று குறிப்பிட்ட விஜய், பாஜக என்ற வார்த்தையை ஒருமுறை கூட சொல்லவில்லை.
கரூர் சம்பவம் நிகழ்ந்து 72 நாட்களுக்கு பின் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே போலீசார் அனுமதி வழங்கி இருந்த நிலையில், கூடுதலாகவே மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் 11 மணிக்கு தவெக பொதுக்கூட்டம் தொடங்குவதாக இருந்த நிலையில், விஜய் 10.45 மணிக்கெல்லாம் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டார்.

இதன்பின் விஜய் பேசுகையில், தமிழ்நாடும், புதுச்சேரியும் வேறு வேறு கிடையாது. 1977ல் எம்ஜிஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார். ஆனால், 1974லேயே புதுச்சேரியில் ஆட்சி அமைத்துவிட்டார். தமிழ்நாட்டை ஒதுக்குவது போல், புதுச்சேரியையும் மத்திய அரசு ஒதுக்கக் கூடாது. அதேபோல் வேறு கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து பாரபட்சம் பார்க்காமல் புதுச்சேரி அரசு நடந்துள்ளது.
புதுச்சேரி அரசுக்கும், சிஎம் சார்-க்கும் மனப்பூர்வமான நன்றி.. இதனை பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும். அதேபோல் புதுச்சேரியில் ஆளும் கட்சி கூட்டணியில் மத்திய அரசு இருந்தாலும், அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. மாநில அந்தஸ்து கோரிக்கை என்ன ஆனது?
வேலைவாய்ப்புக்காக மத்திய அரசு ஒரு ஐடி கம்பெனியை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமே இல்லை. புதுச்சேரியின் எந்த பகுதியிலும் முன்னேற்றம் இல்லை.. புதுச்சேரி மக்கள் திமுகவை மட்டும் நம்பிவிடாதீர்கள்.. அவர்கள் உங்களை நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள் என்று தெரிவித்தார். விஜய்யின் 12 நிமிட பேச்சில் என்ஆர் காங்கிரஸ் கட்சியை பாராட்டி இருந்தார்.
அதேபோல் மத்திய அரசு மற்றும் திமுகவை கடுமையாக சாடினார். ஆனால் புதுச்சேரி பிரச்சனைகளை பேசும் போது மத்திய அரசு என்று குறிப்பிட்ட விஜய், ஒருமுறை கூட பாஜகவின் பெயரை சொல்லவில்லை. மாறாக தமிழக அரசு என்று சொல்வதற்கு பதிலாக திமுக அரசு என்று விஜய் விமர்சித்தார். இதனால் என்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விஜய் முயற்சித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications