Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலராவால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு.. இருவர் பலி.. காரைக்காலில் அவசர நிலை பிரகடனம்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தில் காலராவால் பாதிக்கப்பட்ட இருவர் இணை நோய்களால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Recommended Video

    காரைக்காலில் காலராவால் பாதிப்படைந்தவர்களை சந்தித்து பேசிய எல் முருகன் - வீடியோ

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காலரா பாதிப்பு எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏராளமான மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்து வந்தன. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீ ராமுலு காரைக்காலில் மருத்துவ குழுவினருடன் ஆய்வு செய்தார்.

    காலரா பாதிப்பு

    காலரா பாதிப்பு

    இதுகுறித்து அவர் கூறுகையில், காரைக்கால் மாவட்டத்தில் சமீபகாலமாக கடுமையான வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. மேலும் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தண்ணீர் மாதிரிகள் திருப்திகரமாக இல்லை. சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார்.

    அதிக மக்கள் பாதிப்பு

    அதிக மக்கள் பாதிப்பு

    இதனிடையே நாளுக்கு நாள் மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் காரைக்கால் மாவட்டத்தை பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது. இதுவரை காலரா நோயால் 1,584 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலரா பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்புக்குழு அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

    இருவர் பலி

    இருவர் பலி

    இந்த நிலையில் காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை தரப்பில், இருவருக்கும் இணை நோய்கள் இருக்கிறது எனவும், ஒருவருக்கு புற்று நோயும், மற்றொரு நபருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும், அதே நேரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மக்களுக்கு அறிவுறுத்தல்

    மக்களுக்கு அறிவுறுத்தல்

    பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன், கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கவும். சாப்பிடும் முன், கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் சுகாதாராத்துறையால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பான கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்தவும், திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கவும், வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அல்லது வாந்தி எடுத்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+