அப்ரூவல் இல்லாத பட்டா மனைகள்.. புதுச்சேரியில் "புழுங்கிய" பெயிரா.. ரங்கசாமி சொன்ன நம்பிக்கை வார்த்தை

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி மக்களின், பட்டா மாறுதலுக்கு இணையதள வசதியை ஏற்படுத்த வேண்டும், மனை வரன்முறை சட்டத்தை மீண்டும் அமல்படுத்தி, நடைமுறைகளை மாற்றி எளிமைப்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு பெயிரா கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் புதுவை மாநில பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பு ஆலோசனை கூட்டம் புதுச்சேரியில் மாநில தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது.

unapproved patta plots land limitation act puducherry

இந்த கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், நேரு, வைத்தியநாதன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர், என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, புதுச்சேரி மாவட்டத்தின் வீட்டுவசதித் துறை, பதிவுத்துறை, வருவாய்த்துறை, உள்ளிட்ட துறைகளில் நிலவுகின்ற பிரச்சனைகள் குறித்து விரிவாக உரையாற்றினார்.. அத்துடன் புதுச்சேரியில் நிலவிவரும் சிக்கல்களை களைவதற்கான வழிமுறைகள் குறித்தும் நிர்வாகிகளிடம் கலந்தோசித்தார்.

பட்டா மாறுதல்: பின்னர், நிர்வாகிகளின் தீவிர ஆலோசனைக்கு பிறகு பட்டா மாறுதல் செய்வற்கான புதிய இணையதளம், மனை வரன்முறை சட்டத்தை மீண்டும் அமல்படுத்தி, எளிமைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்கள் அடங்கிய கடிதத்தை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து, பெயிரா பொறுப்பாளர்கள் நேரில் சென்று வழங்கினார்கள். இதையடுத்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ரங்கசாமி, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனையை போக்கும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்துள்ளார். புதுச்சேரி மக்களுக்களின் நலனை கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்ட ஒருசில முக்கிய தீர்மானங்கள் இவைகள்தான்:

அனுமதியற்ற பட்டா மனைகள்: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அமைந்துள்ள அனுமதியற்ற பட்டா வீட்டு மனைகளை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள், அவர்களின் பட்டா மனைகளை மனை வரன்முறை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இதுவரை 60% சதவீதம் மனைகளுக்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளனர்.

மீதமுள்ள 40% மனைகளுக்கும் எளிமையான முறையில் அனுமதி பெறும் வகையிலும், வளர்ச்சி கட்டணம் தற்போது சதுர மீட்டருக்கு ரூபாய் 180 என உள்ளது, இதனை பாதியாக குறைத்து சதுர மீட்டருக்கு ரூபாய் 90 என நிர்ணயித்து, மீண்டும் மனை வரன்முறை சட்டத்தை அமல்படுத்தி அதில் உள்ள கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் நடைமுறைகளை மாற்றியமைத்து எளிமைப்படுத்தி, மேலும் 6 மாதம் கால நீடிப்பு செய்திட வேண்டுகிறோம்.

தண்டத்தொகை :
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வீட்டுவசதி துறையில் உள்ள கடுமையான சட்ட திட்டங்களால் முறையான அனுமதி பெறாமல், அனுமதியற்ற முறையில் பதிவுத்துறையின் உதவியுடன் இதுவரை தோராயமாக 50000 எண்ணிக்கையிலான பத்திரங்கள் பதிவாகியுள்ளன, தற்போது இதில் வீடு கட்டுவதற்கு பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை போர்க்கால அடிப்படையில் பொதுமக்களின் நலன் கருதி, அரசு இதற்கு சிறப்பு திட்டத்தை கொண்டு வந்து, குறைந்த அளவில் தண்டத்தொகை விதித்து, அனுமதி பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டுகிறோம்.

தானியங்கி முறையில் பட்டா: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பொதுமக்கள் தங்களின் பெயரில் பதிவு செய்யும் சொத்துக்களை முறையாக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து பட்டா மாற்றம் செய்யவில்லை. காரணம் இதற்கு முறையான நடைமுறை இங்கு இல்லை. ஆகவே புதுச்சேரி அரசு, பதிவுத்துறை இணையதளத்தையும் வருவாய் துறை இணையதளத்தையும் இணைத்து தானியங்கி முறையில் தாமாகவே உடனடியாக பட்டா மாறும் வகையில் வழிவகை செய்ய வேண்டுகிறோம்.

மேலும் நில அளவை செய்வதற்கும், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கும், புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு மொத்தமாக உட்பிரிவு செய்வதற்கும் இணையதளம் வாயிலாகவே விண்ணப்பித்து தீர்வு காணும் வகையில் தமிழகத்தை போன்று புதுவையிலும் புதிய சட்ட திட்டங்களையும் நடைமுறைகளையும் கொண்டு வந்து, அமல்படுத்தி விரைவில் தீர்வு காண வேண்டுகிறோம்.

நில வகைப்பாடு: புதிய வீட்டுமனை பிரிவுகள், மனை உட்பிரிவுகள், கட்டிட திட்ட அனுமதி, நில வகைபாடு மாற்றம் போன்றவற்றை ஒற்றை சாளர முறையில் (Layout single window system) விரைவில் அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.. ஆகவே அரசு உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு, மேற்கண்ட ஒற்றை சாளர முறை திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

வீட்டுவசதித் துறை, பதிவுத்துறை, வருவாய்த்துறை, உள்ளிட்ட துறைகளில் நிலவுகின்ற பிரச்சனைகளை களைந்திட, அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் சங்கங்களின் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து முத்தரப்பு குழு அமைத்திட வேண்டுகிறோம் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+