கைக் குழந்தையுடன் இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கிய தம்பதி.. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கி கைக்குழந்தையுடன் நூலிழையில் மூவரும் உயிர்தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே போக்குவரத்து விதிகளை பெரும்பாலானோர் மதிப்பதில்லை என்பதே போலீஸாரின் குற்றச்சாட்டாக உள்ளது. ஒரு வாகனம் வருகிறது என்றால் நின்று நிதானமாக செல்ல வேண்டும் என்ற எண்ணமே சிலருக்கு இருப்பதில்லை.
அந்த வாகனத்தை எப்படி முந்தி செல்வது? என்பதில்தான் குறியாக இருப்பார்கள். இன்னும் சிலர் இரு வழி சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் வரிசையாக இருக்கும். ஆனால் இவர்கள் எப்படியாவது முன்வரிசையில் போய் நிற்க வேண்டும் என்பதற்காக வாகனம் வரும் எதிர்திசையில் போய் அங்கு ஒரு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவர்.

முன் கூட்டியே
எந்த இடத்திற்குச் சென்றாலும் முன்கூட்டியே கிளம்ப வேண்டும் என பெரியவர்கள் சொல்வதை யாரும் கேட்பதில்லை. இது போன்ற நேரம் தவறாமையை பெரும்பாலானோர் கடைப்பிடித்தாலும் சிலர் கடைப்பிடிப்பதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பையோ உடலுறுப்புகளையோ இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுவை
இது போன்று ஒரு சம்பவம்தான் புதுவையில் நடந்துள்ளது. புதுச்சேரி அருகே கல்மண்டபம் கிராமத்தில் புதுச்சேரி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக தனது மனைவி, கைக்குழந்தையுடன் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

முந்தி செல்ல முயற்சி
அப்போது அந்த பேருந்தை முந்தி செல்ல முயற்சித்தார். அந்த நேரம் பார்த்து எதிர்திசையில் இருந்து ஒரு பேருந்து வந்தது. அப்போது ஒரு பேருந்து இடித்து அந்த வாகன ஓட்டி நிலைத்தடுமாறி விழுந்தார். இதை பார்த்த பேருந்தில் இருந்தவர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் ஒரே பதை பதைப்பு ஏற்பட்டது. பின்னர் என்னாச்சோ ஏதாச்சோ என பார்க்கும் போது அவர்கள் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பம்பர்
பேருந்தின் முன் சக்கர பம்பரில் இரு சக்கரம் வாகனம் சிக்கியவுடன் அவரது மனைவி கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு கணவரை திட்டிக் கொண்டே வெளியே வந்துவிட்டார். அந்த கணவரோ தான் செய்த தவறு தெரியாமல் எதிர்திசையில் வந்த பேருந்து ஓட்டுநரை திட்டினார். இவர்கள் உயிர் பிழைத்ததை அறிந்த பேருந்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

மனைவி
அந்த இரு சக்கர வாகன ஓட்டியை , மனைவி கைக் குழந்தையுடன் பயணிக்கும் போது கவனமாக இருக்க வேண்டாமா? என அனைவரும் திட்டினர். மேலும் ஏதோ நேரம் நல்லா இருக்கவே தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது. இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும் என பயணிகள் அந்த இளைஞருக்கு அறிவுரை வழங்கினர். இந்த விபத்து குறித்து பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications