வெளியே சொல்ல முடியாத பிரச்சனை.. கதறி அழுத மாற்றுத்திறனாளி பெண்.. ஓடிப்போய் உதவிய விஜயின் தவெக
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பெற்றோர், கணவரை இழந்த மாற்றுத்திறனாளி நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த பிரச்சனையை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தீர்த்து வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை கொட்டாய்க்கார தெருவை சேர்ந்தவர் புவனேஸ்ரி. மாற்றுத்திறனாளி. இவரது கணவர் இறந்து விட்டார். புவனேஸ்வரியின் அம்மா- அப்பாவும் தவறிவிட்டனர். இதனால் புவனேஸ்வரி கஷ்டப்பட்டு வருகிறார். அவர் வசித்து வரும் வீட்டில் கழிவறை வசதி கூட கிடையாது.

ஏழ்மை நிலை காரணமாக புவனேஸ்வரியால் வீட்டில் கழிவறையும் கட்ட முடியாத நிலை உள்ளது. இதனால் அவர் வெளியே சொல்ல முடியாத பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தினர் உதவி செய்துள்ளனர்.
பச்சைக்கொடி.. அரசியல் ஆட்டத்தை தொடங்கும் விஜய்! விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி
அதாவது புவனேஸ்வரி தனக்கு கழிவறை கட்டி கொடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தில் செயல்பட்டு வரும் விஜய் மக்கள் இயக்க தலைவரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து உடனடியாக அவர்கள் தங்களின் சொந்த செலவில் புவனேஸ்வரிக்கு கழிவறை கட்டி வழங்கினர்.
இந்த வேளையில் புவனேஸ்வரி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். கையெடுத்து கும்பிட்டபடி ‛எனக்கு ரொம்ப கேவலமா இருந்துச்சி. எனக்கு யாருமே உதவி செய்யவில்லை. நீங்கள் உதவி செய்ததற்கு நன்றி. இந்த உதவியை ஒருநாளும் மறக்கமாட்டேன்’ என்று கண்கலங்கி நன்றி தெரிவித்தார்.
விஜயுடன் கூட்டணியா? இப்படியெல்லாம் கேட்காதீங்க.. கேள்வி கேட்டதுமே சூடான பிரேமலதா! பதில் என்ன பாருங்க
அதன்பிறகு புவனேஸ்வரி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛என் பெயர் புவனேஸ்வரி. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. எனது கணவர் இறந்துவிட்டார். அம்மா, அப்பாவும் இல்லை. ஒரு தம்பி இருந்தான். அவனும் இறந்துவிட்டான். எனக்கு அண்ணன், அக்காள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எனக்கு உதவி செய்வது இல்லை.
நான் 25 ஆண்டுகளாக கொட்டாய்கார தெருவில் வசித்து வருகிறேன். விஜய் கழக தலைவர் தான் எனக்கு உதவி செய்தார். கழிவறை இல்லை என்று அவரிடம் கூறினேன். அவர்கள் கட்டி கொடுத்துள்ளனர். இந்த உதவியை எப்போதும் மறக்கமாட்டேன்’’ என தெரிவித்தார்












Click it and Unblock the Notifications