இனி நாங்கல்லாம் ஒன்னு! புதுக்கோட்டை விவகாரத்தில் உடன்பாடு! பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதி!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாகவும், அங்கு நடைபெற்று வந்த தீண்டாமை சம்பவங்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்ற தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் அனைத்து மக்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு வந்த பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது
கடந்த சில தினங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததை அறிந்த பொதுமக்கள் தொட்டியின் மேலே சென்று ஆய்வு மேற்கொண்ட போது அதில் மர்ம நபர்கள் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது.

குடிநீரில் மலம்
இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சோதனை செய்தபோது மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது இது தொடர்பாக வெள்ளனுர் காவல் நிலையம் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்தே ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆலய நுழைவு
மேலும் அந்த பகுதி மக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு சிலர் அய்யனார் கோவிலுக்கு எங்களை அனுமதிக்கவில்லை என்றும் டீ கடையில் இரட்டை டம்ளர் முறை இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக பட்டியல் அனைத்து மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட செய்தார்.

தீண்டாமை வன்கொடுமை
அப்போது அவர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பெண் ஒருவர் திடீரென்று சாமியாடி, பட்டியலின மக்களைப் பார்த்து கோவிலுக்குள் ஏன் வந்தாய் என்று கேட்டதால் மாவட்ட ஆட்சியரும், உயர் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சாமி ஆடிய பெண் மீதும், இரு குவளை முறையை பயன்படுத்திய டீக்கடை உரிமையாளர் மீதும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு ஆட்சியர் கவிதா ராமு உத்தரவு பிறப்பித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண் வருகின்றனர்.

கைது
கிராமத்தில் பட்டியலின மக்களை, மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது, இழிவு செய்து பேசிய சிங்கம்மாள் என்ற பெண், அஞ்சப்பன் ஆகியோர் மீது SC/ST தடுப்புச் சட்டத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சிங்கம்மாள், மூக்கையா இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைதி உடன்படிக்கை
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக, பட்டியலின மக்கள் வைக்கும் கோரிக்கைகள் தொடர்பாக ஆர்டிஓ அலுவலகத்தில், ஆர்டிஓ முன்னிலையில் இன்று இரு தரப்பினருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்ற தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். பட்டியலின மக்கள் கோயிலுக்குள் வருவதை நாங்கள் தடுக்கவில்லை என விளக்கம் அளித்த அவர்கள், எழுத்துப்பூர்வ ஒப்புதலை ஆர்டிஓவிடம் வழங்கினர். இதனால் அக்கிராமத்தில் நிலவி வந்து பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications