அறந்தாங்கியில் ஆசையாக பிரியாணி சாப்பிட்ட 41 பேர் மருத்துவமனையில் அனுமதி... கடைக்கு சீல்
அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை : அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியாணி கடையை ஆய்வு செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்துள்ளனர்.
Recommended Video
அறந்தாங்கி அருகே பிரியாணி சாப்பிட்ட கட்டிட தொழிலாளர்கள் 27 பேர் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அறந்தாங்கி செந்தமிழ் நகரில் சித்திரவேல் என்பவரின் வீட்டு கட்டுமான பணியில் நேற்று கான்க்ரீட் போடப்பட்டது. இதனால் அங்கு பணிபுரிந்த கட்டிட தொழிலாளர்களுக்கு சித்திரவேல் பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார்.

கான்கிரீட் பணியை பாதியில் நிறுத்திவிட்டு சாப்பிட முடியாததால் மாலை 5 மணிவரை வேலை முடிந்த பிறகு பிரியாணி பொட்டலங்களை தொழிலாளர்கள் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதில் சிலர் வீடுகளுக்கு பிரியாணியை எடுத்து சென்று சாப்பிட்டதாக தெரிகிறது.
இரவில் பிரியாணியை குழந்தைகளோடு சாப்பிட்டு படுத்த சில மணி நேரத்தில் கட்டிட கூலித் தொழிலாளர்களுக்கு வாந்தி ,மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஒவ்வொருவராக அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 வயது குழந்தை முதல் 27ழு பேர் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் இதில் சிலர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று 27 பேர் பிரியாணி சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் 13 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 41 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொதுத்தேர்வு தயாராகி வரும் மாணவர்கள் சிலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
கட்டிட தொழிலாளர்கள் மட்டுமின்றி உறவினர்களுக்கும் சித்திரவேல் பிரியாணி வாங்கி தந்த நிலையில் மேலும் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு சீல் வைத்ததுடன் பயன்படுத்திய சிக்கன் பழையதா? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications