‘என்னது 2 அமைச்சர்கள் தவெகவில் இணைய போகிறார்களா’.. ஆதவ் அர்ஜுனாவை பங்கமாக கலாய்த்த ரகுபதி
புதுக்கோட்டை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை, நிர்வாகிகளின் கட்சி தாவல்கள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் 2 திமுக அமைச்சர்கள் விரைவில் தவெக வில் இணைய போவதாக ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ரகுபதி, ஆதவ் அர்ஜுனா வின் கிளி ஜோசியத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கலாய்த்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் களத்தில் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.

ஆதவ் அர்ஜுனா பகீர்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் தவெக வில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி இன்று திமுக வில் இணைந்துள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியலில் மேலும் மாற்றங்கள், பல நிர்வாகிகளின் கட்சி மாற்றம், கூட்டணி மாற்றம் எதிர்பார்க்கலாம். இதனிடையே வருகிற ஜனவரி மாதம், திமுக வில் சிட்டிங் அமைச்சர்களாக உள்ள இருவர் தவெக வில் இணைவார்கள் என்று தவெக தேர்தல் மேலாண்மை நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி செல்வாக்கு தேறாது. பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கும் தேறாது. தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் பாஜகவின் மாயாஜால வித்தைகள் எல்லாம் தமிழகத்தில் எந்த காலத்திலும் எடுபடாது. பொன். ராதாகிருஷ்ணன் என்னை பாஜக வின் B டீம் என்று சொல்லியுள்ளார்.
யார் பாஜக டீம்
அவர் இதுநாள் வரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். ஆளுநர் பதவி, ஜனாதிபதி பதவி, துணை ஜனாதிபதி பதவி எல்லாம் எதிர்பார்த்து அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. நானும் கட்சியில் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக என் மீது விமர்சனம் செய்து விளம்பரம் தேடுகிறார். அவர் சொல்வதை போல நான் பாஜகவின் டீமாக இருந்தால் அவர் என்னை காட்டி கொடுத்துவிடுவாரா. பாஜக வின் B டீம் எது, C டீம் எது, ஸ்லீப்பர் செல் யார் உள்ளிட்ட எல்லாவற்றையும் நாங்கள் சொல்லிவிட்டோம்.
நான் அதிமுக விற்கு துரோகம் செய்து வந்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நான் திமுக வில் இணைந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதும் அதே பழைய பல்லவியை பாடிக் கொண்டிருக்கிறார். அதனால் ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும். அப்போது எடப்பாடி பழனிசாமி சாதாரண மாவட்ட செயலாளர் தான். அப்போது நாங்கள் நல்ல பொறுப்புகளில் இருந்தவர்கள். எடப்பாடியை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை.,
ஆதவ் கிளி ஜோசியம்
நாங்கள் எப்போதும் திராவிட மாடல் ஆட்சியில், எங்கள் தலைவருக்கு துணை நிற்பவர்கள். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆதவ் அர்ஜுனாவுடைய ஜோசியத்திற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. எங்களிடம் எல்லாம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அமைச்சர்களிடம் அப்படி யாரும் பேசவிட முடியாது. அவர் பார்க்கிற கிளி ஜோசியத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது." என்றார்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications