"சக்சஸ்".. ஆஷா 9 மாத கர்ப்பம்.. கல்யாணமே ஆகலை.. ஐயப்பன் அசரலையே.. புதுக்கோட்டையில் நொறுங்கிய "சாதி"
புதுக்கோட்டை: சாதியை உடைத்தெறிந்து ஒரு காதல் ஜோடி திருமணம் செய்துள்ளது.. ஆனால், போலீசாரின் உதவியுடன் நடந்துள்ள இந்த திருமணம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை இருகுடும்பங்களிலும் ஏற்படுத்தி வருகிறது.
தஞ்சை பின்னவாசலை சேர்ந்தவர் ஐயப்பன்.. இவர் சேலத்தில் வேலை பார்த்து வருகிறார். கல்லூரி படிப்பை முடித்த ஐயப்பன் சேலத்தில் உள்ள தனியார் டவர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் ஆஷா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.. புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஆஷா.. புதுக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து விட்டு சென்னையில் மகளிர் விடுதியில் தங்கி மொபைல் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார் ஆஷா.. இவரும் ஐயப்பனை உயிருக்குயிராக விரும்பினார்..
கர்ப்பம்: இப்படியே 7 வருடங்கள் உருண்டோடிவிட்டது.. திருமண பேச்சை இருவருமே அவரவர் வீடுகளில் எடுத்தார்கள்.. ஆனால், சாதி குறுக்கே வந்து நின்றது.. 2 வீட்டினருமே எதிர்ப்பை காட்டினார்கள்..
இதனால் காதலர்கள் கையை பிசைந்து நின்றனர். இரு வீட்டையும் எப்படி சமாதானப்படுத்துவது? என்று விழித்தனர்.. எனினும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், ஒருவருக்கொருவர் நெருங்கி பழகினார்கள்.. இதில் ஆஷா கர்ப்பமானார்..
இப்போது, இந்த இந்த கர்ப்பத்தையே, இருவரும் காரணம் காட்டினார்கள்.. இதனால் 2 வீட்டு பெரியவர்களும் பதறிவிட்டார்கள்.. உடனடியாக திருமணம் செய்ய வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுவிட்டது. கர்ப்பத்தை கலைக்க முடியாத சூழலில் வந்து விஷயத்தை சொன்னதால், ஆஷாவின் பெற்றோர்கள், வேறு வழியின்றி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னார்கள்.
சமாதானம்: ஆனால், ஐயப்பன் வீட்டிலோ இதை கேள்விப்பட்டதுமே கொந்தளித்து விட்டடார்கள்.. ஆஷா வேறு சாதி என்பதால், ஐயப்பனையே குடும்பத்திலிருந்து விலக்கி வைக்க முடிவெடுத்துவிட்டார்கள்.. இதனால், குடும்பத்தினரை சமாதானப்படுத்த ஐயப்பன் முயன்றார்.. இந்த விவகாரங்கள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, அதற்குள் ஆஷா நிறைமாத கர்ப்பிணியாகிவிட்டார். பிரசவத்துக்கும் நாளும் குறித்தாகிவிட்டது.
ஓரிரு வாரங்களில் பிரசவம் நடக்க உள்ளதால், உடனடியாக திருமணத்தை நடத்த வேண்டும் என்று ஆஷா வீட்டில் அவசரம் காட்டினார்கள்.. ஆனால் ஐயப்பன் வீட்டிலோ நிலைமை தலைகீழாகிவிட்டதால், ஐயப்பனும் குழம்பி போய் அமைதியாகிவிட்டார்.. அதற்குபிறகு இந்த விஷயத்திலிருந்து ஒதுங்கியும்விட்டார்.
ஐயப்பன் மவுனம்: இதனால் ஆஷா அதிர்ந்து போனார்.. ஐயப்பனின் மவுனம், பெரும் கலக்கத்தை ஆஷாவுக்கு தந்தது.. அதனால், புதுக்கோட்டை மகளிர் போலீசுக்கு சென்றார்.. அவர்களின் உதவியையும் நாடினார்.. இதையடுத்து, போலீஸார் ஐயப்பனை அழைத்து விசாரித்தனர்..
ஆஷாவை கல்யாணம் செய்து கொள்ள தான் எப்போதுமே தயார் என்றார்.. இதையடுத்து, உடனடியாக ஐயப்பன் - ஆஷா கல்யாணம் ஒரு கோயிலில் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.. ஐயப்பனின் பெற்றோர் விரைவில் மனம் மாறுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த ஜோடி இணைந்திருக்கிறது.. பெரியவர்கள் மனம் மாறுவார்களா? "சாதி" தகர்த்தெறியப்படுமா??? தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications