நாளை நடக்க இருந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்த கலெக்டர் கவிதா ராமு.. தச்சங்குறிச்சியில் பரபரப்பு!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடக்க இருந்த ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கடைசி நேரத்தில் அனுமதி தர மறுத்து விட்டதால் விழா கமிட்டியினர், இளைஞர்கள், அரசு அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் முன்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை முறையாக பின்பற்றாததால், ஜல்லிக்கட்டு போட்டியை வேறு தேதிக்கு மாற்றுமாறு கூறியுள்ளார்.
நாளை ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் திடீரென அனுமதி மறுத்ததால் அப்பகுதியினர் கடும் அதிருப்தி அடைந்து, அரசு அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தச்சங்குறிச்சி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் உள்ள அடைக்கல அன்னை ஆலயத்தில் புத்தாண்டையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 1ஆம் தேதி நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு, 2017க்குப் பிறகு ஜனவரி 2ஆம் தேதி நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டு, ஜனவரி 6ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் மேற்கொண்டு வந்தனர்.

ஜல்லிக்கட்டு
தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் நடைபெற உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தச்சங்குறிச்சியில் நாளை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அனுமதி தர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில்
ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது பின்பற்ற வேண்டிய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை முறையாக பின்பற்றாததால், ஜல்லிக்கட்டு போட்டியை வேறு தேதிக்கு மாற்றுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கிராம பிரமுகர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்து நாளை போட்டியை நடத்த தயாராகி வந்த நிலையில் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் விழா ஏற்பாட்டாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பேச்சுவார்த்தை
மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்ததால் அதிருப்தி அடைந்த விழா கமிட்டியினர், கிராம இளைஞர்கள் அரசு அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தச்சங்குறிச்சியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications