தவெகவில் 60- 70 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருக்காங்க! குண்டை போடும் ரகுபதி! விஜய் கட்சியில் பிளவு?

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: தவெக மீது அக்கட்சியை சேர்ந்த 60 முதல் 70 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி பகீர் தகவலை தெரிவித்துள்ளார். இந்த எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் திமுகவினர் ஆதரிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "புதுக்கோட்டை பேருந்து நிலையம், உள் விளையாட்டு அரங்கம் ஆகிய இரண்டுமே எங்களது ஆட்சியில் கட்டப்பட்டது.

tvk raghupathi

இது எங்களுடைய சாதனைகள். அதைத் தொடர்ந்து வந்த ஆட்சி, அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி அதற்கு சிறப்பு விருது நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். எப்போதும் போல் முதல்வர் விஜய் பேசாமல் சென்றுவிட்டார்.

தவெக அரசு

திமுக, அதிமுகவும் சேர்ந்து தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதெல்லாம் தவெக கிளப்பிய வதந்தி. குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்க பார்க்கிறார்கள். 1980-ஆம் ஆண்டு எம்ஜிஆரும், கருணாநிதியும் இருந்த போதே பிஜு பட்நாயக், திமுகவையும் அதிமுகவையும் ஒன்று சேர்க்க எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அன்று இருந்த இரண்டாம் கட்ட தலைவர்கள், இது ஒத்து வராது என சொல்லிவிட்டனர்.

எனவே அதிமுகவும் திமுகவும் ஒன்று சேரப் போகிறது என்பது தவெகவினர் கிளப்பிய வதந்தி என்றார். நவம்பர் 13 ஆம் தேதிக்கு பிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

அதற்கு ரகுபதி பதிலளிக்கையில், "நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவெக எம்எல்ஏக்கள் அதை கொண்டு வந்தால் நாங்கள் ஆதரிப்போம். தவெக எம்எல்ஏக்களில் அதிருப்தியாளர்கள் அதிகம். அவர்களில் ஒரு 60 பேர் ஒன்று சேர்ந்து அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தால் நாங்கள் ஆதரிப்போம். அதிருப்தியாளர்கள் 60 முதல் 70 எம்எல்ஏக்கள் இருப்பதாக சொல்கிறார்கள், பார்ப்போம் என்ன நடக்குது என்பதை! இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.

தவெக குதிரை பேரம்

அதிமுக எம்எல்ஏக்களை விலை வாங்கி தவெக குதிரை பேரம் நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தவெக எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக ரகுபதி சொல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் கணக்கிட்டுதான் தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும் என திமுக மூத்த நிர்வாகிகளும், திமுக தலைவர் ஸ்டாலினும் கூறி வந்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தவெகவினரோ விஜய்தான் நிரந்தர முதல்வர் என்றும் இன்னும் கூடிய விரைவில் எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபை நடக்கும் என்றும் கூறிவருகிறார்கள்.

கைதி தப்பியதற்கு விமர்சனம்

அது போல் ரகுபதி தவெக அரசை தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், கைதிகள் தப்பிச் செல்கிறார்கள் என்ற வாதத்தை சாக்காக வைத்து தனியார்மயமாக்குகிறார் கலெக்‌சன் குமார். சட்டத்துறையில் ஆடு மேய்ப்பவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி, மின்சாரத்துறையில் ஒரு யூனிட் மின்சாரம் 41 ரூபாய்க்கு கொள்முதல், இப்பொழுது சிறைத்துறையில் தனியாருடன் லாபி அமைத்து அவர்களிடம் கலெக்‌சன் போடுகிறாரா என்று மக்கள் கேள்வி கேட்பார்களா இல்லையா?

ரீல்ஸ் ஆட்சி

எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரீல்ஸ் மூலமாக ஆட்சி நடத்தி விடலாம், ரீல்ஸ் மூலமாக மக்களை ஏமாற்றி விடலாம். பொய்யான வதந்திகளை பரப்பிவிடலாம் அதன் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்று தொடர்ந்து தப்பு கணக்கு போட்டுக்கொண்டு இந்த அரசு இந்த தமிழக மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கின்றது.

ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி இன்றைக்கு விழா நடத்துகிறார்கள். திமுக ஆட்சியில் கொண்டு வந்த புதிய பேருந்து நிலையம் திறப்புவிழா காண்கிறது என புதுக்கோட்டையில் திமுகவினர் இனிப்பு வழங்கினால் அதைத் தடுக்கிறார்கள் காவல்துறையினர்.

சட்டம் ஒழுங்கு

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் ஒழுங்குபடுத்த காவல்துறையை பயன்படுத்தாமல், பந்தோபஸ்துக்கும்-இனிப்பு வழங்குவதை தடுப்பதற்கும் பயன்படுத்தினால் கொலைகளும்-கொள்ளைகளும் பெருகாமல் என்ன செய்யும்?

5 தொகுதி இடைத்தேர்தல் வரட்டும்

முந்தைய ஆட்சியின் திட்டங்களுக்கு துவக்க விழாக்களை நடத்திவிட்டுச் செல்கிற ரீல்ஸ் ஆட்சியாக தான் இந்த தவெக ஆட்சி இருக்கிறது. வெறும் ரீல்ஸ் மூலமாகவே ஐந்தாண்டு காலத்தையும் ஓட்டிவிடலாம் என்று கருதும் தவெக ஆட்சிக்கு நிச்சயமாக ஐந்து தொகுதி இடை தேர்தலிலும் தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+