புதுக்கோட்டையில் பரிதாபம்: சாகசம் செய்யும் பொழுது உடலில் தீப்பற்றியதில் கராத்தே வீரர் உயிரிழப்பு!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கராத்தே வீரர் சாகசம் செய்யும் பொழுது உடலில் தீப்பற்றி எரிந்ததில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். புதுக்கோட்டை வடக்கு நான்காம் வீதி பகுதியில் அமைந்துள்ளது சிங்கமுத்து அய்யனார் கோவில்.
இதன் அருகே உள்ள மைதானத்தில் கடந்த 14-ம் தேதி கராத்தே வீரர்களுக்கான சாகச விழா நடைபெற்றது இதில் பல்வேறு தரப்பட்ட முக்கியஸ்தர்கள் அப்பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சாகசத்தை கண்டுகளித்தனர்

அப்போது கராத்தே பிரிவில் பல்வேறு சாகசங்கள் நடைபெற்றன. இதில் 19 வயதுடைய பாலாஜி என்பவர் கைகளில் துணிகளை கட்டிக்கொண்டு அதில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி சாகசம் செய்து காட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த காற்று வீசியது. காற்றின் வேகம் காரணமாக கைகளில் இருந்த தீயானது குபீரென மிகப்பெரிய அளவில் வெடித்து சிதறியது
இதனால் சாகச வீரர் பாலாஜி உடலில் தீப்பற்றியது. அவர் உடல் கருகி பலத்த படுகாயமடைந்தார் உடனடியாக அங்கு இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சாகச வீரர் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கராத்தே வீரர் பாலாஜி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மரணம் அடைந்த சாகச வீரர் பாலாஜி புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் வசித்து வந்தார். கராத்தே குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பயிற்சி கொடுத்து வந்தார். மேலும் கராத்தே எவ்வாறு பழக வேண்டும் என்பது குறித்து யூடியூபிலும் வீடியோவும் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கராத்தே வீரர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை எற்படுத்தி இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications