ஓ பன்னீர் செல்வம் திமுகவின் பி டீமா?.. நிருபர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் இப்படி சொல்லிட்டாரே!
புதுக்கோட்டை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் திமுகவின் பி டீமா என்ற கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஒரு பதிலை கொடுத்துள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ராஜ ராஜகோபாலத் தொண்டைமானின் உருவ சிலைக்கு திமுக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அறையில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

உதயநிதி
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு புதுக்கோட்டையில் மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

திராவிட மாடல்
அதன்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திராவிட மாடல் தேசிய மாடலாக மாற்றப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டதோடு உங்கள் பதில்தான் என் பதில் என்று கூறினார்.

ஓபிஎஸ் திமுகவின் பி டீமா
இதன்பிறகு ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்று அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனரே என்று நிருபர்கள் கேட்டதற்கு திமுகவில் ஏ டீம், பி டீம் என்பது கிடையாது. தளபதி தலைமையில் ஒரே டீம் தான் என்று கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் திமுகவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள ஓபிஎஸ் புகழ்ந்து பேசியிருந்தார்.

பராசக்தி வசனம்
அது போல் கருணாநிதி வசனம் எழுதிய பராசக்தி படத்தின் வசனத்தை மனப்பாடம் செய்ய தலைமாட்டில் எழுதி வைத்திருந்தேன் என கூறியிருந்தார். அது போல் அண்மையில் முதல்வர் ஸ்டாலினை தேனி எம்பி ரவீந்திரநாத் நேரில் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் திமுகவுக்கு ஓபிஎஸ்ஸும் அவரது மகனும் ஆதரவு தெரிவிப்பதாகவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு குற்றம்சாட்டுகிறார்கள்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications