இரவோடு இரவாக மாறிய விஜய்யின் புதுக்கோட்டை பிளான்.. ரூ.100 கோடி நலத்திட்ட உதவிகள்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அந்த தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களில் முதலமைச்சர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று புதுக்கோட்டை வந்துள்ள அவர், சுமார் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை செல்லும் வழியிலும் சாலையின் இருபுறமும் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு நின்று மலர்களை தூவி வரவேற்றனர்.

Vijay Pudukkottai Tour Tamil Nadu CM Vijay Pudukkottai News

புதுக்கோட்டை வந்தடைந்த விஜய், சுமார் 4 கி.மீ. தூரம் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது வாகனத்தின் மீது நின்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்துச் சென்றார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்த அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரூ.100 கோடி உதவிகள்

புதுக்கோட்டையில் ரூ.23 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.. மேலும், உள் விளையாட்டரங்கையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.

மாவட்டத்தில் மொத்தம் சுமார் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதற்காக நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் நேரடியாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

திடீர் இடமாற்றம்

இதற்கிடையே, இந்த அரசு விழா நடைபெறும் இடம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பிரம்மாண்டமாக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல், மேடை உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.

ஆனால், திடீரென இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்குக்கு மாற்றப்பட்டது. சுமார் 100 பேர் மட்டுமே உட்காரக்கூடிய அந்த அரங்கில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு உதவிகள் வழங்க திட்டமிட்டிருந்த விழா ஏன் இவ்வளவு குறுகிய இடத்திற்கு மாற்றப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதலமைச்சரின் பாதுகாப்பு படையினர் அளித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இடம் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும், இடமாற்றம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விரிவான விளக்கம் அளிக்கவில்லை. இதனிடையே, ஜோதிட ஆலோசனையின் அடிப்படையில் நிகழ்ச்சி இடம் மாற்றப்பட்டதா என்றும் சிலர் சோஷியல் மீடியாயாவில் கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் பயணிக்கும் வழித்தடம் உள்ளிட்ட 13 இடங்களில் மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோட்டிலும் மாற்றம்

புதுக்கோட்டையை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலும் முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் அரசு விழாவின் இடம் மாற்றப்பட்டுள்ளது. முதலில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சி, தற்போது காஞ்சிகோயில் சாலையில் உள்ள தனியார் மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த விழாவில் 9 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி வங்கி நிதி இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் புதுக்கோட்டை, பெருந்துறை ஆகிய 2 இடங்களிலும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் மாற்றப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+