புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவிட்ஷீல்ட் வேக்சின்.. 73 நாட்களில் பயன்பாட்டிற்கு வருமா? வதந்திக்கு சீரம் நிறுவனம் முற்றுப்புள்ளி!

இன்னும் 73 நாட்களில் கோவிட்ஷீல்ட் வேக்சின் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று வெளியாகும் செய்தி பொய்யானது என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

புனே: இன்னும் 73 நாட்களில் கோவிட்ஷீல்ட் வேக்சின் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று வெளியாகும் செய்தி பொய்யானது என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Corona Vaccine உற்பத்தி.. India- ன் உதவியை தேடி வரும் Russia

    கொரோனாவிற்கு எதிரான போரில் புனேவில் இருக்கும் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அமெரிக்காவின் பல்வேறு தடுப்பு மருந்துகள் தொடங்கி ஆஸ்டர்செனெகா - ஆக்ஸ்போர்ட் பல்கலையின் AZD1222 (கோவிட்ஷீல்ட்) வரை அனைத்தும் சீரம் நிறுவனத்தில்தான் தயாரிக்கப்படுகிறது.

    ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் மருந்தும் இங்குதான் தயாரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் சீரம் நிறுவனம் உலகில் அளவில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    Sputnik V வேக்சின்.. இந்தியாவால் மட்டுமே சாத்தியம்.. அவசர Sputnik V வேக்சின்.. இந்தியாவால் மட்டுமே சாத்தியம்.. அவசர

    என்ன தகவல்

    என்ன தகவல்

    ஆஸ்டர்செனெகா - ஆக்ஸ்போர்ட் பல்கலையின் AZD1222 (கோவிட்ஷீல்ட்) மருந்தை சீரம் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. முதல் கட்டமாக 10 மில்லியன் மருந்துகளை தயாரிக்க இவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த நிலையில் சீரம் நிறுவனம் இந்த கோவிட்ஷீல்ட் மருந்தை இன்னும் 73 நாட்களில் மக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரும். மக்கள் இதை பயன்படுத்துவார்கள் என்று செய்திகள் வெளியானது.

    ஏன் மறுப்பு

    ஏன் மறுப்பு

    தற்போது இந்த செய்தியை சீரம் நிறுவனம் மறுத்துள்ளது. அதில், நாங்கள் 73 நாட்களில் மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் எண்ணத்தில் இல்லை. இந்த செய்தி பொய்யானது. முழுக்க தவறான செய்தியை யாரோ பரப்பி வருகிறார்கள். நாங்கள் தற்போது மருந்துகளை உற்பத்தி செய்ய மட்டுமே அனுமதி பெற்று இருக்கிறோம்.

    அனுமதி பெறவில்லை

    அனுமதி பெறவில்லை

    மக்களிடம் விற்பனை செய்ய நாங்கள் அனுமதி பெறவில்லை. இப்போது மருந்துகளை உற்பத்தி செய்து, அதை பாதுகாத்து வைக்க மட்டுமே எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்று புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த கோவிட்ஷீல்ட் மருந்து தற்போது மூன்றாம் கட்ட சோதனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாத இறுதியில் மூன்றாம் கட்ட மனித சோதனை முடிய வாய்ப்பு உள்ளது.

    விலை என்ன

    விலை என்ன

    இந்த மருந்து அமலுக்கு வந்தால் விலை குறைவாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு மருந்தை வெறும் 225 ரூபாய்க்கு மக்களுக்கு விற்க புனே நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியா மற்றுமின்றி மற்ற நடுத்தர , ஏழை நாடுகளுக்கும் இதே விலையில் விற்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட் மருந்து அமலுக்கு வந்தால் 57 நாடுகளுக்கு இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் இருந்து மருந்து ஏற்றுமதி செய்யப்படும்.

    English summary
    CovidShield Vaccine won't come to people use in 73 days says Serum Institute of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X