ராமநாதபுரத்தில் வாகன தணிக்கை! "சார் அது ரஸ்க் பாக்கெட்! இந்தா பாருங்க!" எடுத்துக் காட்டிய கருணாஸ்
ராமநாதபுரம்: சார் லாக்கரில் ஒன்றும் இல்லை, ரஸ்க் பாக்கெட்தான் வைத்திருக்கிறேன் என நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ், பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதிலிருந்தே தேர்தல் நடத்தை விதிகள் வந்துவிட்டன. அதன்படி வாக்குகள் பெறுவதற்காக சாதி அல்லது வகுப்புவாத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக் கூடாது.

கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது பிற வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரச்சார மேடையாக பயன்படுத்தக் கூடாது. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, வாக்காளர்களை மிரட்டுவது, ஆள்மாறாட்டம் செய்வது போன்றவை தேர்தல் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணத்தையும் பரிசு பொருட்களையும் வழங்குகிறார்கள் என்பது காலம் காலமாக நடக்கும் குற்றச்சாட்டாகும். அது போல் இந்த முறையும் பண நடமாட்டத்தை தடுக்க உரிய ஆவணங்கள் இல்லாமல் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்துச் செல்லுவோரின் பணம் பறிமுதல் செய்கிறது.
இதனால் போலீஸார், தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர் உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அந்தந்த மாவட்ட எல்லைகளில் செல்லும் வாகனங்களை சோதனை செய்கிறார்கள். ஒரு வேளை கட்டுகட்டாக பணம் எடுத்துச் செல்ல உரிய ஆவணங்கள் இருந்தால் பரவாயில்லை.
எந்த ஆவணமும் இல்லாவிட்டால் அந்த பணத்தை பறிமுதல் செய்கிறார்கள். அந்த வகையில் ஆங்காங்கே லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. பொது மக்கள் என்றில்லாமல் அரசியல் கட்சியினரின் வாகனங்களும் சல்லடை போட்டு தேடப்படுகிறது.
அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், எம்பி கனிமொழி, அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோரின் வாகனங்கள் தணிக்குள்ளாகியிருந்தன. அது போல் முன்னாள் எம்எல்ஏ கருணாஸின் காரை ராமநாதபுரத்தில் போலீஸார் சோதனை போட்டனர். அப்போது டிக்கியை ஓபன் செய்ய சொன்ன போது அதில் கேன்கள் இருந்தன.
அது என்ன கேட்ட போது, காருக்கு ஊற்றும் ஆயில் என்றனர். மேலும் தலைக்கு வைக்கும் காற்று அடிக்கும் தலையணை, பைகள், டிஸ்யூ பேப்பர்களிலும் உடைமைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து காரின் முன்பக்கம் வந்த போலீஸார், கருணாஸ் உட்கார்ந்திருந்த முன்பக்கத்தில் உள்ள லாக்கரை திறக்க சொன்னார்கள்.
அதை திறக்க சொன்ன போது "சார் இதுல ரஸ்க் பிஸ்கெட் இருக்கிறது. என் செலவுக்கு கொஞ்சம் பணம் இருக்கிறது" என்றார். இதையடுத்து போலீஸார் அந்த வாகனத்தை அனுப்பி வைத்தனர். அது போல் அடுத்தடுத்து வரும் வாகனங்களை ஒரு இடம் விடாமல் தேடி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications