ராமநாதபுரம் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? காதர் பாட்சாவுக்கு சவால் கொடுக்கும் பாஜக, தவெக!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளராக காதர் பாட்சா என்கிற முத்துராம லிங்கம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ள நிலையில், இம்முறை அவரின் வெற்றி எளிதாக இருக்காது என்று பார்க்கப்படுகிறது. அதிமுக, பாஜக, நாதக மற்றும் தவெக என்று பல்வேறு நிர்வாகிகளும் திமுக வேட்பாளருக்கு எதிராக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட வேட்பாளர்களும் உறுதி செய்யப்பட்டு தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் ராமநாதபுரம் தொகுதியில் இம்முறை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Ramanathapuram Tamilnadu Assembly Election 2025 TVK Vijay

ராமநாதபுரம் தொகுதியில் திமுகவை பொறுத்தவரை காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் எம்எல்ஏ-வாக இருக்கிறார். காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் மற்றும் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் இடையில் மோதல் நீடித்து வருகிறது. ராமநாதபுரம் பொறுப்பு அமைச்சராக ராஜ கண்ணப்பனின் கைகள் ஓங்கினாலும், மாவட்டச் செயலாளராக காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் இருந்து வருகிறார்.

இதனால் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கத்திற்கே மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. கடந்த முறை இவர் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியை பெற்றார். அதேபோல் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் ஒன்றிய செயலாளர் ஆர்ஜி மருது பாண்டியன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர்.

இந்த ரேஸில் ஜிஆர் மருது பாண்டியன் முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் முக்குலத்தோர் தொகுதிகளில் பாஜக வேகமாக வளர்ந்து வருவதால், இந்த தொகுதியை பாஜகவுக்கு கொடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு எடுக்கலாம். கடந்த முறையும் பாஜகவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் திமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவிய கதிரவனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சி கடந்த முறை சுமார் 8 சதவிகித வாக்குகளை பெற்றது. அதுமட்டுமல்லாமல் தவெகவுக்கும் இளைஞர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. பரமக்குடி, காரைக்குடி ஆகிய தொகுதிகளை கடந்து ராமநாதபுரம் தொகுதியில் தவெக அந்த தொகுதியில் வேகமாக வளர்வதாக பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை முக்குலத்தோர், இஸ்லாமியர்கள், மீனவர்கள் மற்றும் யாதவர்கள் அதிக வசிக்கும் பகுதியாகும். இதில் இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுகவுக்கு கணிசமாக செல்லும் நிலையில், முக்குலத்தோர் வாக்குகளில் 50 சதவிகிதத்தை பெற்றால் கூட எளிதாக திமுகவால் வெல்ல முடியும். ஆனால் தவெகவின் எழுச்சி திமுகவுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+