ராமேஸ்வரத்தில் பாய்ந்த "வெளிச்சம்".. மத்திய அரசு அதிரடியால் துள்ளி குதிக்கும் மாணவர்கள்.. பாஜக குஷி
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் தொகுதிக்கு குட்நியூஸ் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகம் இதற்கான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது. இதற்கு தேசிய கட்சிகளும் தயாராகி வருகின்றன.. அந்தவகையில், தமிழகத்தை குறிவைத்து பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடுகிறது.

உலகின் மூத்த மொழி தமிழ் என்று அடிக்கடி சொல்லி வரும் பிரதமர் மோடி, தமிழ் இலக்கியங்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றியும் வருகிறார்.. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோல் வைக்கப்பட்டதும் கவனத்தை ஈர்த்திருந்தது.
அமித்ஷா அதிரடி: இதன் அடுத்த திட்டமாக, எம்பி தேர்தலில் வாரணாசியுடன் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட பிரதமர் மோடி வியூகம் அமைப்பதாக தெரிகிறது. அதற்கேற்றபடி, தமிழகம் வந்திருந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, "அடுத்து தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வருவார்" என்று சரவெடியை வீசிவிட்டு சென்றிருந்தார்.
காசியில் ஏற்கனவே உறுப்பினராக உள்ள நிலையில், ராமேஸ்வரத்திலும் வெற்றி பெற்றுவிட்டால், இந்தியா முழுமைக்குமான தலைவராக அங்கீகாரம் கிடைக்கும் என்று பிரதமர் மோடி கணக்கு போடுவதாக தெரிகிறது. இந்த யூகங்களுக்கெல்லாம் வலு சேர்ப்பதுபோல், பாஜக மாநில தலைவரின் பாதயாத்திரையும், அந்த பகுதியில் இருந்தே துவங்கப்பட்டுள்ளது.
பாஜக பலம்: ஒருவேளை ராமேஸ்வரத்தில் பாஜக வெற்றி பெற்றால், அக்கட்சிக்கு பல மடங்கு நன்மை கிடைக்கும்.. இதுவே தோல்வியை சந்தித்தால், பாஜகவின் இப்போதுள்ள நிலைமையே தொடரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், ராமேசுவரத்தில் வேத, சம்ஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
வேதங்களுக்கான முறையான கல்வியை வழங்க 1987-ல் டெல்லியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக "மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான்" நிறுவப்பட்டது... இதை அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் பி.வி.நரசிம்ம ராவ் தொடங்கி வைத்தார். பிறகு, 1993-ல் இந்த அமைப்பு டெல்லியிலிருந்து, மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனிக்கு மாற்றப்பட்டது.
வேதபாடசாலைகள்: இந்த அமைப்பின் முக்கியப் பணி, வேத பாடசாலைகளை உருவாக்குவதும் அவற்றுக்கு ஆதரவு அளிப்பதும் ஆகும். தற்போது நாடு முழுவதும் 450 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு மாணவர்கள் சம்ஸ்கிருதம், வேதங்கள், உபநிடதங்கள், ஆயுர்வேதம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைப் படித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தானின் கீழ் செயல்படும் கல்வி நிலையங்களுக்கு இந்திய பல்கலைக் கழகங்களின் சங்கம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் கிடைத்தது. இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு நிறைவுச் சான்றிதழ்களை வைத்து உயர்கல்வியில் சேர முடியும்.

கல்வி அமைச்சகம்: இந்நிலையில் வேதக் கல்வியை ஊக்குவிப்பதற்காக வேத, சம்ஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையங்களை மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமேஸ்வரம், பத்ரிநாத், துவாரகா உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஏற்கனவே, 75 வருடங்களுக்கு முன்புவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேசுவரத்துக்கு மாணவர்கள் வந்து குருகுலக் கல்வி மூலம் சம்ஸ்கிருதத்தையும், உபநிடதங்களையும் கற்றனர்.. 1965-ல் ராமேசுவரத்தில் தொடங்கப்பட்ட தேவஸ்தான பாடசாலையில் சம்ஸ்கிருதம் கற்று தரப்பட்டது என்றாலும், அடுத்த சில வருடங்களிலேயே இது மூடப்பட்டுவிட்டது.
இரட்டிப்பு மகிழ்ச்சி: இப்போது மறுபடியும், ராமேஸ்வரத்தில், பிராந்திய மையம் அமைக்க போவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.. இந்த அறிவிப்பின்மூலம், சம்ஸ்கிருதத்தையும், வேத உபநிடதங்களையும் மறுபடியும் மாணவர்கள் கற்க வாய்ப்பு கிடைத்துள்ளது, பெருத்த மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டு வருகிறது.
அத்துடன், விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த அசத்தல் அறிவிப்பானது, பாஜகவுக்கான நன்மதிப்பை மேலும் உயர்த்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications