நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த மனைவி.. கழுத்தை நெரித்து கொலை செய்த டிரைவர்.. பரபரப்பு வாக்குமூலம்!
ராமநாதபுரம்: நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த மனைவியை டிரைவர் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அவர் உடனடியாக போலீஸ் நிலையம் சென்று ஆஜரானார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. டிரைவர்.
இவரது மனைவி ராதிகா. இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.

அடிக்கடி தகராறு
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து ராதிகா கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஏனாதி கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ராதிகா குழந்தையை அழைத்து வந்துள்ளார். இதற்கிடையே ராதிகாவுக்கும், தூரி கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கள்ளக்காதல்
முதலில் நட்பாக தொடங்கிய உறவு பின்னர் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக மாடசாமி மனைவியை பலமுறை கண்டித்துள்ளளார். ஆனாலும் ராதிகா-செல்வக்குமார் இடையேயான உறவு தொடர்ந்து வந்தது. இதனால் மனைவி மீது உச்சக்கட்ட கோபத்தில் இருந்துள்ளார் மாடசாமி.

கொலை செய்தார்
இந்த நிலையில் ஆத்திரமடைந்த மாடசாமி மனைவி ராதிகாவை நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்தபோது, கழுத்தை நெரித்து, தலையணையை வைத்து அழுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து மாடசாமி முதுகுளத்தூர் காவல் நிலையம் சென்று மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம்
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ராதிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி தகாத உறவில் ஈடுபட்டு வந்ததும், செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருப்பததாகவும், இதை பலமுறை கண்டித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் கொலை செய்து விட்டதாகவும் மாடசாமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications