நோ என்ட்ரி! பிரதமர் மோடி வருகை காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை! ராமேஸ்வரத்தில் கடும் கட்டுப்பாடு
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதை முன்னிட்டு ராமேஸ்வரம் பகுதிகளில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை சென்னையில் தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று மாலை சென்னை வரும் பிரதமர் மோடி, நாளை திருச்சி செல்கிறார். ஜனவரி 20ஆம் தேதி நாளை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி. பின்னர், திருச்சியிலிருந்து மதுரைக்கு செல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.

ராமேஸ்வரம் வரும் மோடி: நாளை பிற்பகலில் ராமேசுவரத்திற்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார். அதன் பின்னர் ராமநாதசுவாமி கோவிலை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறார். நாளை இரவு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்குகிறார்.
நாளை மறுநாள் (ஜனவரி 21ஆம் தேதி) காலை ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடுகிறார். பிறகு மீண்டும் ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார். அதன் பிறகு கார் மூலம் அரிச்சல்முனைக்கு சென்று, கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார்.
பக்தர்களுக்கு தடை: பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார். அதன் பின்னர், 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்கிறார் பிரதமர் மோடி. ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்துச் செல்லும் தீர்த்தத்தை அயோத்திக்கு கொண்டு செல்கிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி தமிழ்நாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி வருகை எதிரொலியாக ராமேஸ்வரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராமநாதசுவாமி கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்: பிரதமர் மோடி வருகையையொட்டி நாளை ஜனவரி 20ஆம் தேதி நாளை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் எனவும், நாளை பிற்பகல் 12 மணி முதல் 21 ஆம் தேதி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாளை பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை இராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. நாளை பகல் 12 மணி முதல் நாளை மறுநாள் பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை மறுநாள் ஜனவரி 21ஆம் தேதி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ராமேஸ்வரம் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இரு நாட்களுக்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்: 20.01.2024 நண்பகல் 12 மணி முதல் 21.01.2024 நண்பகல் 12 மணி வரை தனுஷ்கோடி செல்ல போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு நலன் கருதி ராமேஸ்வரம் நகரம் முழுவதும் 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய தேதிகளில் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் வருகையை ஒட்டி பாதுகாப்பு போலீசார் தங்குவதற்காக ராமேஸ்வரத்தில் உள்ள 12 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
26 வயது கொத்தனாருக்கு திருச்சியில் விழுந்த மரண அடி! காமுகர்களுக்கு நீதிபதி ஜெயந்தி தந்த சரியான பாடம் -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications