Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாதுகாப்புத்துறை அமைச்சர் டூ பிரதமர்! சவுதியின் புதிய பிரதமரானார் முடி இளவரசர் முகமது பின் சல்மான்

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக உள்ள முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே சல்மான்தான் நாட்டின் அதிகாரம் மிக்க தலைவராக இருந்த நிலையில் தற்போது இது முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது தந்தையான சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் நாட்டின் அரசராக உள்ள நிலையில், நடப்பாண்டில் மட்டும் இரண்டு முறை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனவே அடுத்த அரசராகும் தகுதி முகமது பின் சல்மானுக்கு (MBS) இருக்கும் நிலையில், அதற்கான பணிகள் இப்போதே நடைபெற்று வருகின்றன.

அனுபவம்

அனுபவம்

உலகில் மன்னராட்சி அமலில் உள்ள நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று. 86 வயதான சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் இந்நாட்டின் அரசராக இருக்கிறார். நடப்பாண்டில் மட்டும் அவர் உடல் நலக்கோளாறு காரணமாக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இச்சூழலில் அவரது மகனான முகமது பின் சல்மான் நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே நாட்டின் துணை பிரதமராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவராவார்.

இதர அமைச்சர்கள்

இதர அமைச்சர்கள்

நாட்டின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாதுகாப்புத்துறையின் இணை அமைச்சராக இருந்த முகமது பின் சல்மானின் இளைய சகோதரர் காலித் பின் சல்மான், பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை சவூதி அரேபிய பத்திரிகை நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சராக இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் நியமிக்கப்பட்டுள்ளார்.

 மாற்றத்திற்கான நோக்கம்

மாற்றத்திற்கான நோக்கம்

மேலும், நிதியமைச்சராக முகமது அல்-ஜடான், வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சராக காலித் அல்-பாலிஹ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது முகமது பின் சல்மான் பிரதமராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அமைச்சரவை கூட்டங்களுக்கு அரசர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல்தான் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது பின் சல்மானை பொறுத்த அளவில், அவர் நாட்டை இஸ்லாமிய உலகின் இதயமாகவும், முதலீட்டு அதிகார மையமாகவும் மாற்றவும் தொடர்ந்து முயன்று வருகிறார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதனை சாத்தியப்படுத்த 'விஷன் 2030' எனும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் சவுதி அரேபியா மூன்று கண்டங்களை இணைக்கும் மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகமது பின் சல்மான், அதிகார பொறுப்புக்கு வந்ததிலிருந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர் வரை அந்நாட்டில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் முகமது பின் சல்மான் இதற்கான அனுமதியை கொடுத்தார். மேலும், இதர மதத்தினர் மீதான ஆதிக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+