மெக்காவுக்குள் நுழைந்த வேற்று மத பத்திரிகையாளர். . இஸ்லாமியர்கள் கொந்தளிப்பு. .
ரியாத்: முஸ்லிம்களின் புனித இடமாக கருதப்படும் மெக்காவுக்குள் வேற்று மதத்தை சேர்ந்த இஸ்ரேல் பத்திரிகையாளர் சென்றது இஸ்லாமியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த நபரை மெக்காவுக்குள் அனுமதித்த சவுதி அரேபிய நபரை போலீசார் கைது செய்தனர்.
இஸ்லாமியர்களின் புனித இடமாக கருதப்படும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மசூதிக்கு ஆண்டுதோறும் உலகில் பல நாடுகளில் இருந்து சுமார் 25 லட்சம் மக்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தொற்று பரவல் குறைந்துள்ளதால் நடப்பு ஆண்டில் வெளிநாட்டு பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெக்காவிற்கு இஸ்லாமிய நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை.

10 நிமிட வீடியோ
இந்த நிலையில், மெக்கா நகருக்குள் இஸ்ரேலை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் சென்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள சேனல் 13 என்ற தொலைக்காட்சியில் பணியாற்றும் கில் டாம்ரி என்ற செய்தியாளர் 10 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் ஹஜ் புனித பயணத்தின் இறுதி நிகழ்வாக இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் இடமான மவுண்ட் அராபத் என்ற இடத்திற்கு சென்ற காட்சிகளையும் பதிவு செய்தார்.

இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளிப்பு
தனது செயல் சட்டத்திற்கு புறம்பானது என்று நன்கு அறிந்திருந்த கில் டாம்ரி, தனது செயலை நியாயப்படுத்தும் வகையில், நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு மிகவும் முக்கியமான இடமாக உள்ளதை வெளிக்காட்டவே இப்படி செய்ததாக விளக்கம் அளிக்கிறார். கில் டாம்ரியின் இந்த செயல், அங்குள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன. கில் டாம்ரி தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்தார். இதனால், எதிர்ப்புகள் குறைந்தன.

அமெரிக்க குடிமகன்
இதற்கு மத்தியில், இஸ்லாமியர் அல்லாத நபரை மெக்காவிற்குள் செல்ல உதவியதற்காக சவுதி அரேபியாவை சேர்ந்த நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். மெக்காவிற்குள் சென்ற இஸ்ரேல் பத்திரிகையாளரின் பெயரை சவுதி அரேபியா நாட்டு போலீசார் வெளியிடவில்லை. அமெரிக்க குடிமகன் என்று மட்டுமே தெரிவித்துள்ளது. மேலும், அவருக்கு எதிராக சட்ட விதிகளின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சவுதி அரேபிய போலீசார் உறுதிபட தெரிவித்தனர்.

இஸ்ரேலுடன் நல்லுறவு இல்லை
இஸ்ரேல் நாட்டுடன் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகள் வர்த்தக உறவை ஏற்படுத்திக்கொண்டாலும், இஸ்ரேலை அங்கீகரிக்க சவுதி அரேபியா மறுத்துவிட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் இஸ்ரேல், சவுதி அரேபியா என அடுத்தடுத்து சென்றார். இது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற நிலையில், இஸ்ரேல் தொலைக்காட்சியில் பணியாற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் சர்ச்சையில் சிக்கியிருப்பது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications