தென்படாத பிறை.. சவூதி அரேபியாவில் வரும் 23ம் தேதி ரமலான் நோன்பு துவக்கம்.. தமிழ்நாட்டில் எப்போது?
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
ரியாத்: சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை பிறை தென்படாத நிலையில் அங்கு வரும் 23ம் தேதி ரமலான் நோன்பு துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் எப்போது ரமலான் நோன்பு எப்போது தொடங்க வாய்ப்பு என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள்.

நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது வழக்கம்.
இந்த நோன்பு காலத்தில் உணவு உண்ணாமல், நீர் பருகாமல் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். அதிகாலை முதல் அந்தி மாலை வரை நோன்பு நோற்கும் இஸ்லாமியர்கள் அதன்பிறகு நோன்பு கஞ்சி சாப்பிட்டு நோன்பை முடிப்பார்கள். மேலும் இப்தார் விருந்தும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிறை பார்த்தே நோன்பு கடைப்பிடித்தல் என்பது துவங்கப்பட உள்ளது.
அதன்படி சவூதி அரேபியாவில் இன்று பிறை தென்படவில்லை. இதனால் வியாழக்கிழமை முதல் ரமலான் மாதம் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சவூதி அரேபியாவுக்கு மறுநாள் ரமலான் நோன்பு தொடங்கும். எனவே வரும் வெள்ளிக்கிழமை இங்கு ரமலான் தொடங்க வாய்ப்புள்ளது. இருப்பினும் பிறை பார்த்தே இறுதி முடிவு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications