“ஹாலா” ரொனால்டோ.. சவூதி அரேபியா சென்ற கால்பந்து ஜாம்பவான்! மஞ்சள் ஜெர்சியில் அரபுகள் உற்சாக வரவேற்பு
ரியாத்: சவூதி அரேபியாவை சேர்ந்த அல் நஸ்ர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் சர்வதேச கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்நாட்டிற்கு சென்று இருக்கும் நிலையில் அவருக்கு அரபு மக்கள் மற்றும் அணி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அல் நஸ்ர் அணியின் மஞ்சள் நிற சீருடை அணிந்த சிறுவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
போர்ச்சுகலை சேர்ந்த சர்வதேச கால்பந்து ஜாம்பவானான ரொனால்டோ பிரிட்டனின் மான்செஸ்டர் யுனைட்டேன் அணியில் இருந்து விலகியதை தொடர்ந்து அண்மையில் சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் அணியில் விளையாடுவதற்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
65 ஆண்டுகள் பழமையான சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் அணிக்காக 2025 ஆம் ஆண்டு வரை விளையாட ரூ.4,400 கோடிக்கு ரொனால்டோ ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

ரொனால்டோ கருத்து
இதுகுறித்து ரொனால்டோ தெரிவிக்கையில், "நான் ஐரோப்பிய கால்பந்தில் நினைத்த அனைத்தையும் வென்று இருக்கிறேன். ஆசியாவில் என் அனுபவத்தை பகிர இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன். புதிய அணி வீரர்களுடன் விளையாடும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அவர்களின் வெற்றிக்கு என்றும் நான் துணையாக இருப்பேன்." என்றார்.

அறிமுக விழா
இந்த நிலையில் அல் நஸ்ர் அணி சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள மெர்சூல் பூங்கா மைதானத்தில் ரொனால்டோவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று இரவு 7 மணியளவில் நடத்துகிறது. இதற்காக ரொனால்டோ நேற்றிரவு சவூதி அரேபியாவுக்கு வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அவரை ரியாத் விமான நிலையத்தில் அணி நிர்வாகத்தினர், கால்பந்து ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

அரபுகள் கொடுத்த வரவேற்பு
பல ஆண்டுகளால சவூதி அரேபியாவில் லீக் போட்டிகள் நடந்து வந்தாலும், ரொனால்டோவே அதில் விளையாடும் உச்ச நட்சத்திரம் என்று கூறப்படுகிறது. தனது உதவியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் வந்த அவரை வரவேற்று ரியாத் நகரம் முழுவதும் "ஹாலா ரொனால்டோ" என டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான அரபு சிறுவர்கள் அல் நஸ்ர் அணியின் ஜெர்சியை அணிந்து அவரை வரவேற்றனர்.

அல் நஸ்ர் அணி பெற்ற வெற்றிகள்
சவூதி அரேபியா புரோ லீக் தொடரில் அல் நஸ்ர் அணி தற்போது விளையாடி வருகிறது. 9 பிரீமியல் லீக் தொடர்கள், 6 கிங் கோப்பைகள், 3 கிரவுன் பிரின்ஸ் கோப்பைகள், 3 கூட்டமைப்பு தொடர்கள், 2 சவூதி சூப்பர் கோப்பைகள் தொடரில் அந்த அணி கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு சவூதி புரோ லீகில் வெற்றிபெற்றது.

ஆசிய கால்பந்து தொடர்
சர்வதேச அளவில் ஜிசிசி சாம்பியன்ஸ் லீக் தொடரில் 2 முறை அல் நஸ்ர் கோப்பை வென்று உள்ளது. அதேபோல் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆசியாவின் கவுரவம் மிக்க கால்பந்து தொடரான AFC கால்பந்து தொடரிலும் அல் நஸ்ர் வெற்றிபெற்று இருக்கிறது. ரொனால்டோ வருகையால் மீண்டும் அந்த தொடரில் வெல்ல முடியும் என அல் நஸ்ர் நம்புகிறது.

ரொனால்டோவால் ஜாக்பாட்
இவ்வளவு தொகை கொடுத்து ரொனால்டோவை அல் நஸ்ர் அணி வாங்க முக்கிய காரணம் அவரது வருகையால் அணிக்கு கிடைக்கும் விளம்பரம் மற்ரும் விளம்பர தொகை உயர்வும்தான். அத்துடன் அந்த அணிக்கான ரசிகர் வட்டமும் அதிகரிக்கும். பிறநாடுகளில் பலரால் அறியப்படாத அணியாக இருந்த அல் நஸ்ர் ஒரே நாளில் உலக மக்கள் மத்தியில் புகழ்பெற்று உள்ளது.

சமூக வலைதள ஃபாலோயர்கள்
ரொனால்டோ அல் நஸ்ர் அணியில் இணையும் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், அவர் அல் நஸ்ர் அணியின் ஜெர்சியுடன் நிற்கும் படத்தை பகிர்ந்து தங்கள் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அணி நிர்வாகம் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது. அடுத்த நிமிடமே ஃபாலோயர்கள் எண்ணிக்கை உயரத் தொடங்கி 7.3 மில்லியன், அதாவது 73 லட்சத்தை தொட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications