முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சனம்: எடப்பாடி பழனிசாமி மீது பெங்களூர் புகழேந்தி போலீசில் புகார்
சேலம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது பெங்களூரு புகழேந்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
Recommended Video
சேலம் அருகே நிலவாரப்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு ஸ்டாலின் மட்டுமின்றி அவரது மகன் மருமகள் மற்றும் குடும்பத்தினர் என நான்கு பேர் முதலமைச்சராக செயல்படுகிறார்கள் என பேசியுள்ளார்.

இதையடுத்து முதல்வர் குறித்து அவதூறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யக் கோரி அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி இன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி, தமிழகத்தில் 4 முதல்வர்கள் ஆட்சி செய்வதாக கூறும் எடப்பாடி பழனிசாமி இந்திய நாட்டை நான்கு பிரதமர்கள் ஆள்வதாக சொல்வாரா என கேள்வி எழுப்பினார்.
மேலும் அதிமுகவின் தோளில் நின்று 4 இடங்களை கைப்பற்றிய பாஜக தனியாக நின்று தமிழகத்தில் ஒரு தொகுதியையாவது கைப்பற்ற முடியுமா என்ற அவர், மக்களால் எதிர்க்கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவை புறந்தள்ளிவிட்டு பாஜக எதிர்க்கட்சி போல் செயல்பட நினைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் அனைத்தும் ஜோக்கர் போல் உள்ளதாகவும் விமர்சித்தார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications