பாஜகவை எதிர்க்கட்சியாக உருவாக்கி விடுவதே திமுகதான்.. அண்ணாமலை சொல்கிறார்! சேகர்பாபுவிற்கும் வார்னிங்
சேலம்: தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜகவை திமுக உருவாக்கிக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடனான சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவகிறது. மலைவாழ் மக்கள் ஒருங்கிணைந்து அறக்கட்டளை ஒன்றை தொடங்கி மத்திய அரசின் நிதியை பெற்று பலனடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவுகளுக்கு தமிழக பாஜக முழுமையாக ஆதரித்து உடன் நிற்கும். சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அனுமதியை பெறாமல், கர்நாடகாவில் அணையை கட்ட முடியாது. ஏற்கனவே இதுதொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள், தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கைகளில் உள்ளது. பாரம்பரியமாக கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்களை மிரட்டல் தொனியில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் உள்ளது. மதுரை ஆதீனத்தின் பேச்சில் எங்கேயும் அரசியல்வாதிகளின் பெயரை குறிப்பிடவே இல்லை. அதனால் அமைச்சர் சேகர் பாபு மிரட்டுவது போன்ற செயல்பாடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ஊழலை மறைக்க முடியாது
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஊழல் குறித்து கூறினால் வழக்கு தொடர்வது வழக்கமான விஷயமாக உள்ளது. வழக்குத் தொடர்ந்தால் வாயை அடைத்துவிட முடியாது. எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் ஊழலை யாரும் மறைக்க முடியாது. ஊழலை மறைக்க முயற்சித்தால், ஊர்ஜிதம் செய்த பின் ஊழல் தொடர்பான அடுத்த பட்டியலை வெளியிடுவோம். இரண்டாவது பட்டியல் முதல் பட்டியலைவிட பத்து மடங்கு அதிகமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி யார்?
தமிழகத்தில் பாஜகவை திமுக தான் பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. திமுகவை பாஜக எதிர்க்கவில்லை. பாஜகவை-தான் திமுக எதிர்க்கிறது. எங்களின் நோக்கம் எதிர்க்கட்சி என்பது அல்ல. ஆளும்கட்சியாக பாஜக மாற வேண்டும் என்று உழைத்து வருகிறோம். சொல்லப்போனால் நம்பர் 3 பார்ட்டி என்பது எங்கள் இலக்கல்ல; நம்பர் 1 பார்ட்டியாக வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று தெரிவித்தார்.
-
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா?












Click it and Unblock the Notifications