கருணாநிதிக்கு பெரிய சிலை தேவையா? கருப்பு பெயிண்ட் பூசி கைதான 77 வயது டாக்டர்.. பரபரப்பு வாக்குமூலம்
சேலம்: சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி உயர முழு உருவ வெண்கலச்சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 77 வயது மருத்துவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நாட்டில் மக்கள் பசி பட்டினியால் பாதிக்கப்படுகின்றனர். ஏழைகள் மதுபோதைக்கு அடிமையாகி வருகின்றனர். இப்படியான சூழலில் கருணாநிதிக்கு இவ்வளவு பெரிய சிலை தேவையா? என்று கருப்பு பெயிண்ட் ஊற்றியதாக தெரிவித்து இருப்பது திடுக்கிட வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வரும், திமுகவின் மாஜி தலைவருமான கருணாநிதியின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் நான்கு ரோடு அண்ணா பூங்கா அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிலையை கடந்த 2023ம் ஆண்டில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கருணாநிதி சிலை அமைந்துள்ள இடத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்நிலையில் தான் நேற்று அதிகாலையில் கருணாநிதியின் சிலை அவமதிப்பு செய்யப்பட்டு இருந்தது.
அதாவது அந்த சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டு இருந்தது. அதிகாலையில் சிலை வழியாக சென்றவர்கள் கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டு இருப்பது பற்றி திமுக நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். திமுகவினர் குவிந்தனர். பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கருணாநிதி சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிவயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் கூறினர்.
சம்பவ இடத்துக்கு போலீசாரும் விரைந்தனர். உதவி போலீஸ் கமிஷனர் அஸ்வினி, அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர் குழுவினரும் ஆய்வு செய்தனர். அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது காரில் முதியவர் ஒருவர் பெயிண்டு டப்பாவுடன் அந்த வழியாக செல்வது பதிவாகி இருந்தது. இதனால் அவர் தான் கருணாநிதி சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றி இருக்கலாம் என்று போலீசார் கருதினர். தனிப்படை போலீசார் தீவிரமாக அவரை தேடினர். இந்நிலையில் தான் முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கைதான முதியவரின் பெயர் விஸ்வநாதான். இவருக்கு 77 வயது ஆகிறது. இவர் டாக்டர் ஆவார். காது, மூக்கு, தொண்டை சிகிச்சை டாக்டரான இவர் சேலம் 5 ரோடுபகுதியில் வசித்து வருகிறார். இவர் மட்டும் தனியாக காரில் கருப்பு பெயிண்ட்டை எடுத்து சென்று கருணாநிதியின் சிலையின் மீது ஊற்றிவிட்டு திரும்பி வந்துள்ளார்.
நாட்டில் பசி பட்டினி, ஏழைகள் மதுபோதைக்கு அடிமையாகி வருவதாகவும், இந்த வேளையில் இந்த இடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இவ்வளவு பெரிய சிலை தேவையா? என்று நினைத்தேன். கருணாநிதி சிலையை பார்க்கும் போதெல்லாம் மனஅழுத்தம் ஏற்பட்டது. இதனால் 5 லிட்டர் கருப்பு பெயிண்ட் வாங்கி வந்து ஊற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். இது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications