"நைட்டியுடன்" மஞ்சுளா.. கோயிலுக்குள் நுழைந்த திமுக பெண் கவுன்சிலர் .. கதறிய அர்ச்சகர்.. என்னாச்சு?
நைட்டியுடன் கோயிலுக்குள் நுழைந்து, அர்ச்சகரை திமுக பெண் கவுன்சிலர் திட்டியதாக கூறப்படுகிறது
சேலம்: "எனக்கும்,எனது குடும்பத்திற்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழுகாரணம் திமுக கவுன்சிலர் மஞ்சுளாதான்" என்று கோவில் அர்ச்சகர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணாநகர் பகுதியில் ஸ்ரீ சீதாராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் அமைந்துள்ளது.. இந்த கோயில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இதில் அர்ச்சகராக பணியாற்றி வருபவர் கண்ணன்.. திமுக கவுன்சிலர் மஞ்சுளா மூலம் பல்வேறு இடையூறுகள் தனக்கு ஏற்படுவதாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

நைட்டியுடன் மஞ்சுளா
அதாவது, இந்த கோயிலில் மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதை மஞ்சுளா சென்றாராம்.. அப்போது, மஞ்சுளா நைட்டி அணிந்துகொண்டு கோவிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது... இதை பார்த்ததும் அர்ச்சகர் அதிர்ச்சி அடைந்து கண்டித்துள்ளார்.. அதறுகுதான் பெண் கவுன்சிலர் மஞ்சுளா, அர்ச்சகரை ஒருமையில் திட்டிவிட்டாராம்... இது தொடர்பாக கண்ணன், மஞ்சுளா மீது புகார் கூறி வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

பரபரப்பு குற்றச்சாட்டு
அதில், "நான் கடந்த 23 வருடங்களாகவே சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ சீதா ராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறேன்... எனக்கு 40-வது கோட்டத்தின் திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா கோவில் பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுக்கிறார்.. அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்.. இந்த வீடியோ மூலமாக எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு முழுகாரணம் திமுக கவுன்சிலர் மஞ்சுளாதான்..

ஒருமையில் பேசிய மஞ்சுளா?
உடனடியாக இந்த விஷயத்தில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்" என்று அர்ச்சகர் கண்ணன் வீடியோ மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, அர்ச்சகர் கண்ணனிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணைக்கும்போது, திமுக கவுன்சிலர் மஞ்சுளா ஒருமையில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

மஞ்சுளா ஆவேசம்
அந்த வீடியோவில் அர்ச்சகரை, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மஞ்சுளா ஒருமையில் பேசும் காட்சிகளு,ம் உள்ளன.. இதை பார்த்த அங்கிருந்த பெண்கள், அர்ச்சகருக்கு மரியாதை தருமாறு சொல்லியும், மஞ்சுளா, அர்ச்சகரை ஒருமையில் பேசி உள்ளதாக தெரிகிறது. தனக்கும் தன் குடும்பத்திற்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழுகாரணம் திமுக கவுன்சிலர் என்று கோவில் அர்ச்சகர் வெளியிட்டுள்ள வீடியோவால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மஞ்சுளா விளக்கம்
இதுதொடர்பாக 40வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக பொதுமக்கள் புகார் கொடுத்தார்கள்.. அதனடிப்படையில்தான், அர்ச்சகரை கண்டித்தேன்.. அர்ச்சகர் சொல்வதில் உண்மை இல்லை என்று விளக்கம் தந்துள்ளார்.. இரு தரப்பிலுமே மாறி மாறி புகார் சொல்லி உள்ளதால், இதன் உண்மைதன்மையை காவல்துறையே கண்டறிய வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.. எனினும் திமுக கவுன்சிலர்களால் தொடர்ந்து சலசலப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அர்ச்சகரின் இந்த வீடியோவும் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications