சலசலப்பை கிளப்பிய ரஜினி ரசிகர்கள் போஸ்டர்.. ஏன் இப்படி??
ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் நூதன போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
சேலம்: 40 வருடங்களில் தன்னை பற்றின எத்தனையோ போஸ்டர்களை கண்ட நடிகர் ரஜினிகாந்த் இப்படி ஒரு போஸ்டரை எதிர்பார்த்திருக்க மாட்டார்.
ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதும் சரி, பிறந்த நாளுக்கும் சரி, ராத்திரி முழுக்க கண் விழித்து ஒரு சுவர் விடாமல் போஸ்டர் ஒட்டிய அதே ரஜினி ரசிகர்கள்தான் இப்படி ஒரு போஸ்டரையும் ஒட்டி இருக்கிறார்கள். இந்த ரசிகர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள்போல.

நேற்று முன்தினம் ரஜினிக்கு பிறந்த நாள் என்பதால், இந்த போஸ்டரை ரசிகர்கள் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். அதில், "வாழ்க ரஜினி, வளர்க அவரது புகழ்" என்று ஆரம்பிக்கிறது. பிறகு "தலைவா! நீங்கள் சரியான முடிவு எடுக்காததன் விளைவு... என்று ஆரம்பித்து புலம்பியுள்ளனர்.
1996-ல் முதல்வர் பதவியை இழந்தீர்கள்
1998-ல் அமைதியை இழந்தீர்கள்
2004-ல் தன்னம்பிக்கையை இழந்தீர்கள்
2006-ல் உங்களை வாழ வைத்த ரசிகர்களை இழக்க இருக்கிறீர்கள்
தலைவா நீங்கள் சூழ்நிலைவாதியா? சுயநலவாதியா? சந்தர்ப்பவாதியா?
இங்ஙனம்... உங்களை நம்பியிருந்த ரசிகர்களின் அவலகுரல், சேலம்" என்று ஒட்டப்பட்டுள்ளது.
அதி தீவிரமான ரஜினி விசிறியாக இருப்பார்கள் போல. அதனால்தான் வருஷங்களை சொல்லி விலாவாரியாக தங்கள் ஆதங்கத்தை சொல்லி இருக்கிறார்கள்.
ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு வர எவ்வளவு எதிர்பார்த்தார்கள் என்பதும், பிறகு எந்தஅளவுக்கு ஏமாந்து இருக்கிறார்கள் என்பதும் இந்த போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது.
சரி இது ரசிகர்கள்தான் ஒட்டினார்களா.. அல்லது குழப்பம் ஏற்படுத்த யாராவது செய்த சதியா.. ??
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications