Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பச்சையான கலரில் சேலம் சந்திரா வீட்டில் பாம்பு.. அது வாயில் என்ன இருந்தது தெரியுமா? ஆடிப்போன ஆத்தூர்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாம்.. அதிலும் குடியிருப்பு பகுதிகளிலேயே பாம்புகள் வருவது பொதுமக்களை அச்சத்துக்கு ஆளாகி வருகிறது. நேற்றைய தினம் மேற்கண்ட இரு மாவட்டங்களிலும் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி, அந்தந்த பகுதி மக்களிடம் இன்னமும் நீங்கவில்லை.. எனினும் பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஏப்ரல், மே மாதங்களில், வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும்போது, அந்த வெப்பத்திறுக விலங்குகளும் பறவைகளும்கூட தப்புவதில்லை..

Salem Aathur Snake

வெயிலின் தாக்கம் தாங்காமல் இருப்பிடத்தை விட்டு வெளியேறும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகின்றன.. இதனால் பாம்புகளை கண்டால் அவற்றை பாதுகாப்பாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, தீயணைப்பு துறை வீரர்கள் அல்லது பாம்பு பிடி வீரர்களை பொதுமக்கள் நாடுகின்றனர்.

பாம்புகளை பிடிக்க கருவி

தீயணைப்பு துறை வீரர்களிடம் பாம்புகளை பிடிக்க நவீன கருவி உள்ளதால், பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுவிடுகிறார்கள்.

கோடை காலங்களில் குடியிருப்பு பகுதிகளை தேடி பாம்புகள் வந்துவிடுவது வழக்கமாக இருக்கும் நிலையில் இப்போது குளிர்காலத்திலும் பாம்புகள் வீடுகள் உள்ள பகுதிகளுக்கு வந்துவிடுகின்றன.. இதனால் பொதுமக்களுக்கு ஒருவித அச்சம் தொற்றிவிடுகிறது.

நேற்றைய தினம் சேலம் மாவட்டம், நெல்லை மாவட்டங்களில் ஒரேநாளில் அம்மாவட்ட மக்களை கிலிக்கு ஆளாகியிருக்கின்றன பாம்புகள்.

சேலம் தோட்டத்தில் மலைப்பாம்பு

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி, தெற்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன்.. இவரது தோட்டத்தில் நேற்றைய தினம், மலைப்பாம்பு உள்ளதாக தகவல் பரவவும் அந்த பகுதி மக்கள் வெலவெலத்து போனார்கள்..

உடனே கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு இதுகுறித்து தகவல் கிடைக்கவும், தீயணைப்பு வீரர்களும் ராஜேந்திரனின் தோட்டத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கே 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, கெங்கவல்லி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்... பிறகு வனப்பகுதியில் மலைப்பாம்பை பத்திரமாக விட்டனர்.

சந்திரா வீட்டில் பச்சை கலர் பாம்பு

அதேபோல இதே சேலம் ஆத்தூரில், சந்திரா என்பவரது வீட்டின் பின்பகுதியில் உள்ள மரத்தில், நேற்று மாலை, 4 மணிக்கு விநோத சத்தம் கேட்டுள்ளது..

இதனால் சந்திரா சென்று பார்த்தபோது, ஓணானை விழுங்கிய நிலையில் பச்சை நிறத்தில் பாம்பு இருந்ததை கண்டு அலறியடித்து ஓடிவந்துள்ளார்.. இதுகுறித்து உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரவும், அந்த 4 அடி நீள பாம்பை உயிருடன் பிடிக்கப்பட்டது.. பிறகு அந்த பாம்பும், ஆத்துார் வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

நெல்லையில் நல்ல பாம்பு

இதேபோல திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு 10 மணிக்கு, நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது.. இதை பார்த்து பயந்து போன அக்குடும்பத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்து வீரர்களை வரவழைத்தனர்..

பிறகு பாம்பு இருந்த இடத்தை சுற்றி வளைத்து, அதனை பிடிக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் அந்த பாம்பு லேசில் பிடிபடவில்லை.. எனினும் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகே பாம்பை லாவகமாக பிடித்து, சாக்கு பையில் பத்திரமாக அடைத்தனர்..

6 நீள பாம்பு

பிடிப்பட்ட பாம்பு சுமார் 6 அடி நீளத்துக்கு இருந்ததாம்.. பிறகு வனத்துறையினரிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அவர்கள் அதை வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

தங்களது வீடுகளுக்கு அருகே பாம்புகள் நடமாட்டம் இருடந்தால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும், மழையும், குளிரும் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், குடியிருப்பு பகுதிகளிலேயே பாம்புகள் நடமாடுவது பொதுமக்களை கலக்கத்துக்கு ஆளாக்கி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+