சேலத்தில் கள்ளக்காதலனுடன் திருமணம்.. ஸ்டேஷனுக்கு பாதுகாப்பு கேட்டு வந்த திருமணமான பெண்.. ட்விஸ்ட்
சேலம்: கள்ளக்காதல்கள் என்பது சமூகத்தில் என்ன மாதிரியான சிக்கலை ஏற்படுத்தும் என்பது தெரியாமல், பலர் தவறான வழியில் செல்கிறார்கள். சேலம் பகுதியில் திருமணம் ஆன பெண் ஒருவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மெக்கானிக்கை காதலித்துள்ளார். போலீஸ் ஸ்டேசனில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, காதலனுடன் தான் செல்வேன் என்று அடம் பிடித்ததுடன், கணவனை வேண்டாம் என்று விடாப்பிடியாக கூறினார். இதை கேட்டு ஆடிப்போன போலீசார் என்ன செய்தார்கள் என்பதை பார்ப்போம்.
தற்போது திருமணத்தை மீறிய உறவுகள் பல பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த கள்ளக்காதல்கள் பொதுவாக நண்பர்கள், உறவினர்கள் இடையே ஏற்படும் பழக்கம் தவறாக முடிகிறது. எல்லைமீறும் ஆண்களிடம் சில பெண்கள் விட்டுக்கொடுத்து செல்லும் போதும் கள்ளக்காதல்கள் ஏற்படுகிறது. அதேபோல் கணவனின் செயல்கள் பிடிக்காமல் விரக்தியில் இருக்கும் பெண்கள் ஆதரவை வெளியிடும் தேடும் போதும் கள்ளக்காதல்கள் ஏற்படுகின்றன. கள்ளக்காதல்கள் இந்தியாவில் எல்லாமாநிலத்திலும் உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன..

மாமியார் மருமகன்
அதேநேரம் திருமணம் முடிந்த பின்னர், சில வில்லங்கமான விஷயங்களும் நடக்கின்றன. அம்மாவை போல் போற்ற வேண்டிய மாமியார், மருமகனுடன் ஓடிப்போகும் சம்பவங்களும், அப்பாவை போல் பார்க்க வேண்டிய மாமனாருடன் மருமகள் ஓடிப்போகும் சம்பவங்களும் மிக அரிதாக சில பகுதிகளில் நடக்கிறது. அண்மையில கூட மருமகனுடன் மாமியார் ஓடிப்போன சம்பவம் நடந்திருந்தது.
மாமனார் மருமகள்
இப்போது அதே பாணியில் மாமனாராக வரவேண்டியவருடன், பெண் திருமணம் செய்திருக்கிறார். அதாவது மகனுக்கு பார்த்த பெண்ணை, அப்பாவே காதல் விளையாட்டுகள் விளையாடி கரெக்ட் செய்து, திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதை கேள்விப்பட்டு, மகனும், அவரது அம்மாவும் ஆடிப்போயிருக்கிறார்கள். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

சேலம் மெக்கானிக்
இது ஒருபுறம் எனில் சேலத்தில் ஒரு வில்லங்கமான சம்பவம் நடந்துள்ளது. சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 29 வயதாகும் முருகன் கட்டிட தொழிலாளி (பெயர் மாற்றப்பட்டுள்ளது, இவரது மனைவி ஷீலாவுக்கு 24 வயது ஆகிறது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஐந்து வருடங்களாக நன்றாக சென்ற வாழ்க்கையில் மெக்கானிக் ரூபத்தில் புயல் வீசியது.
உல்லாசம்
ஷீலாவுக்கு அதே பகுதியில் வசிக்கும் இருசக்கர வாகன மெக்கானிக்கான ஹரிகரன் (வயது 26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பகலில் கணவர் கட்டிட வேலைக்கு சென்றுவிடுவார். வீட்டில் ஹரிகரனை அழைத்து தனிமையில் இருந்து உல்லாசம் அனுபவித்து வந்தாராம். ஒரு கட்டம் வரை திருமணத்தை மீறிய உறவில் இருந்த அவர், தைரியமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். இதற்காகநேற்று காலை வீட்டில் இருந்து வெளியேறிய அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கழுத்தில் புது தாலியுடன் முருகனும் ஷீலாவும் சூரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். கள்ளக்காதலர்களாக இவர்கள், காதல் ஜோடி போல் வந்து தங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் கோரிக்கை வைத்தனர்.
காதல் ஜோடி அல்ல கள்ளக்காதல் ஜோடி
இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி மற்றும் போலீசார் முதலில் காதல் ஜோடி என்று நினைத்து விசாரித்துள்ளனர். ஆனால் விசாரித்த போது தான் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது கணவர் முருகனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்தனர். அப்போது மனைவி கழுத்தில் வேறு ஒரு தாலியுடன் கள்ளக்காதலனுடன் இருப்பதைக்கண்டு ஆடிப்போனார். பின்னர் அந்த தாலியை கழற்றி வைத்து விட்டு தன்னுடன் வருமாறு முருகன் கெஞ்சினார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத ஷீலா கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று கூறியதுடன் அந்த தாலியை கழற்ற மறுத்து விட்டார்.
மனம் இறங்காத பெண்
இதற்கிடையே குழந்தைகளை பார்த்தால் மனம் மாறிவிடுவார் என்று நினைத்த உறவினர்கள் 2 குழந்தைகளையும் அங்கு அழைத்து வந்திருக்கிறார். குழந்தைகளை பார்த்ததும் அந்த பெண் கதறி அழுதார். இதனை பார்த்த அந்த குழந்தைகளும் அம்மா...அம்மா என்று கதறி அழுதது. ஆனாலும் ஷீலா மனம்மாறவில்லை. இதற்கிடையே ஹரிஹரனின் பெற்றோரை வரவழைத்த போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அழைத்துசெல்லுமாறு தெரிவித்தனர்.
அறிவுரையை ஏற்ற காதலன்
அவர்களும் அங்கு வந்து அறிவுரை கூறினார்கள். மேலும் போலீசாரும் ஹரிகரனிடம், திருமணம் ஆகாத நீ 2 குழந்தைகளின் தாயை திருமணம் செய்து கொண்டு எத்தனை நாள் குடும்பம் நடத்துவாய், அடுத்த குடும்பத்தை அழித்து விடாதே என்று புத்திமதி கூறியிருக்கிறார்கள். பெற்றோர் மற்றும் போலீசாரின் அறிவுரையை ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொண்ட கள்ளக்காதல் ஹரிகரன், பெற்றோருடன் புறப்பட்டு சென்றுவிட்டார். ஆனாலும் இதை ஏற்காத ஷீலா, கள்ளக்காதலன் தான் வேண்டும் என்று மிகவும் பிடிவாதமாக இருந்தார். அவர் கணவரோ, என்னோடு மனைவியை அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சினார்.
பெண் பிடிவாதம்
ஆனால் ஷீலா தனது கணவர் மற்றும் குழந்தைகளை ஒரு பொருட்டாக கூட நினைக்காமல் காதலனுடன் சேர வேண்டும் என்பதில் தான் பிடிவாதமாக இருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் சோர்ந்து போன போலீசார், ஷீலாவை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 நாட்கள் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே ஹரிஹரனின் தாய் திருமணம் ஆகாத தனது மகனை திருமணமாகி 2 குழந்தைகளின் தாயான ஷீலா கடத்தி சென்றுவிட்டார் என்று புகார் கொடுத்திருக்கிறார். இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். கள்ளக்காதல் விவகாரம் இரண்டு குடும்பத்தை சீரழித்திருக்கிறது. ஆனாலும் அதனை கைவிட மனம் இல்லாமல் சுற்றுகிறார்கள் என்பது கசப்பான உண்மை.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications