தேர்தல் காலத்தில் மட்டுமில்லாமல், எல்லா நேரங்களிலும் மக்களை சந்திப்பவன் நான்.. ஸ்டாலின் பெருமிதம்!
சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாம்பை விட விஷமிக்கவர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கொடும் வெயிலை விட கொடுமையிலும் கொடுமையான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்றும் ஸ்டாலின் பேசினார்.
தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டாலின் பிரசாரம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆத்தூர் வேட்பாளர் சின்னதுரை, கெங்கவல்லி வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, உளுந்தூர்பேட்டை வேட்பாளர் மணிகண்டன் மற்றும் கள்ளக்குறிச்சி வேட்பாளர் மணிரத்தினம் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:- கொடும் வெயிலை விட கொடுமையிலும் கொடுமையான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அந்த ஆட்சியை ஒழிக்கனும் என இங்கே ஆரவாரத்தோடு திரண்டிருக்கின்றீர்கள்.

ஆதரவு தேடி வந்துள்ளேன்
இந்த அராஜக அதிமுக ஆட்சியை ஒழிக்க உங்களிடத்தில் ஆதரவு கேட்டு வந்திருக்கின்றேன். நான் ஏதோ தேர்தலுக்காக மட்டும் வந்து போகிறவன் அல்ல. என்றைக்கும் உங்களுடன் இருந்து உங்களுடைய பிரச்சனைக்காக வாதாடுகின்ற வகையில் ஆதரவு கேட்க வந்துள்ளேன். இவர் எப்படி இங்கு வந்து ஓட்டு கேட்க முடியும்?. கொளத்தூர் தொகுதியில்தானே போட்டியிடுகிறார் என நினைப்பீர்கள்.

எப்படி முதல்வர் ஆனார்?
ஆனால் தமிழ்நாடு முழுவதும் நான் முதல்-அமைச்சர் வேட்பாளராக நிற்கிறேன். மேற்கண்ட வேட்பாளர்கள் எல்லாம் வெற்றி பெற்றால்தான் நான் வெற்றி பெற முடியும். ஆகவே அதை மனதில் வைத்துக் கொண்டு நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் முதல்வராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி ஏதோ உளறி கிட்டு இருக்கிறார். அவர் எப்படி முதல்வர் ஆனார் என்ற கதை எல்லாம் சொன்னேன்.

பாம்பை விட விஷமிக்கவர்
அவர் எப்படி முதல்-அமைச்சர் ஆனார் என்று உங்களுக்கு தெரியும். ஊர்ந்து போய் தானே. நான் ஏதோ வாய்க்கு வந்தபடி பேசுகிறேன் என்று நினைக்காதிங்க. தொலைக்காட்சியில், வாட்ஸ்-அப், சமூக வலைதளங்களில் நீங்கள் பார்த்தீங்களே. ஆகவே இதை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. நான் என்ன பாம்பா? பல்லியா? என கேட்கிறாரு. பாம்பு, பல்லிக்கு இருக்கிற விஷத்தை விட பழனிசாமிக்குதான் அதிகமான விஷம் இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications