தனி விமானத்தில் சேலம் பயணம்... அதிரடியாக நான்காம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய கமல்
சேலம்: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சேலத்தில் தனது நான்காம் கட்ட பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
தமிழ்நாட்டில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கி நடத்தி வருகின்றனர்.

அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடந்த மாதம் மதுரையில் தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார்.
சிறிய இடைவெளிக்கு பின் மநீம தலைவர் கமல்ஹாசன் வரும் 6ஆம் தேதி வரை சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் நான்காம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

இதற்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தடைந்த கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சேலம் அழகாபுரம் பகுதியில் தனது நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், திறந்தவெளி காரில் நின்று மக்களிடம் உரையாற்றினார்.
பின்னர் அங்கிருந்து அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக ஏற்காடு சென்ற அவர், ஏரிக்கரை ரவுண்டானா பகுதியிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் தோட்ட தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களுடனும் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications