Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் தமிழ்நாடு விடுதலைப் படை தொடங்கனுமா? சேலத்தில் போலீசாருக்கு எதிராக வெடித்த வேல்முருகன்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஜனநாயக பாதைக்கு திரும்பி ஜனநாயக ரீதியாக அரசியல் கடமையாற்றும் எங்களை மீண்டும் தமிழ்நாடு விடுதலையைப் படையை ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் தமிழக போலீஸ் நினைக்கிறதா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான பண்ருட்டி தி.வேல்முருகன் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் வேல்முருகன் பேசியதாவது: இந்த வேல்முருகன் இன்றைக்கு அரசியல்வாதி. எங்கு காக்கிசட்டை திமிர்த்தனம் செய்ததோ, அடாவடி செய்ததோ அந்த காவல்நிலையங்கள் தமிழ்நாடு விடுதலைப் படையால் வடதமிழகத்தில் தாக்கப்பட்ட வரலாறு உண்டு. அந்த தமிழ்நாடு விடுதலைப் படையை மாவீரன் தமிழரசனுக்குப் பிறகு அந்த ஆயுதப் படையை வழிநடத்தியவன் இந்த வேல்முருகன்.

 ஆண்டிமடம் காவல்நிலைய கொள்ளை

ஆண்டிமடம் காவல்நிலைய கொள்ளை

சிதம்பரம் காவல்நிலையத்தில் பத்மினி கற்பழிப்பு... அந்த காவலர்கள் என்ன ஆனார்கள்? என் சகோதரன் செல்வன் காவல்நிலையத்தில் அடித்து கொல்லப்பட்டான்..பழிக்கு பழியாக குள்ளஞ்சாவடியில் தில்லை கோவிந்தன் குண்டுவீசி கொல்லப்பட்ட வரலாறு.. எங்களுக்கு ஆயுதப் பற்றாக்குறை இருந்த போது ஆண்டிமடம் காவல்நிலையத்தில் இருந்த அத்தனை துப்பாக்கிகளும் எங்கள் தோட்டத்துக்கு வந்தது வரலாறு. இதெல்லாம் வேல்முருகனின் பழைய வரலாறு.

 டிஜிபியிடம் கேளுங்க..

டிஜிபியிடம் கேளுங்க..

சேலம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடி மீது எந்த போலீசாவது கை வைத்தால்... எச்சரிக்கை செய்கிறோம்.. போய் கேளு.. என் மாவட்டத்துல எஸ்பியா இருந்தவர்தான் இன்று சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு.. அவர் கிட்ட போய் மாவட்ட செயலாளராக இருந்த வேல்முருகன் யாரு எப்படியாபட்ட ஆளுன்னு.. அல்லது போலீஸ் கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணனிடம் கேட்டுப் பார்.. ஏன் எங்கள் மாவட்டத்தின் எஸ்பியாக இருந்து இன்று உளவுத்துறை தலைவராக இருக்கிற டேவிட்சன் ஆசீர்வாதத்திடம் கேட்டுப் பாருங்க.. ஒரு ரூபாய் லஞ்சம் வாங்காதவன் நான்..

 ஜனநாயகப் பாதையில் இப்போது...

ஜனநாயகப் பாதையில் இப்போது...

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன், முந்திரிகாட்டு சிங்கம் தமிழரசன் கொள்கைகளையும் வீரப்பனின் வீரத்தையும் நெஞ்சிலேந்தி அரசியல் செய்கிறவர்கள் நாங்கள்.. கோழை அரசியல்வாதிகள் அல்ல நாங்கள். ஆயுதம் ஏந்தி, தமிழ்நாடு தனிநாடு வேண்டும் என்ற வேட்கையில் இருந்த எங்களை தனித் தமிழீழத்துக்கு மனித வெடிகுண்டுகளாக, தமிழீழத்துக்கு துணை நிற்போம் என்பதற்காக களமாடியவர்கள் நாங்கள்.. இன்று ஜனநாயகப் பாதைக்கு வந்து, அரசியல் பாதைக்கு வந்து, அரசியல் மீது நம்பிக்கை வைத்து ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகிறோம். அப்படியான எங்களிடம் அங்க கொடி ஏற்றாதே.. இங்க கொடி ஏற்றாதே என்கிறது போலீஸ்.

 மீண்டும் தமிழ்நாடு விடுதலைப் படையா?

மீண்டும் தமிழ்நாடு விடுதலைப் படையா?

அப்படி என்றால் சேலம் போலீசார், தமிழ்நாடு விடுதலைப் படையை வேல்முருகன் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்கிறதா? என்ன சொல்றீங்க? இல்லை தமிழ்நாடு காவல்துறை சொல்லுதா? அல்லது ஆர்.எஸ்.எஸ், அண்ணாமலை சங்கி காவல்துறை சொல்லுதா? வேல்முருகன் ஜனநாயக ரீதியாக எதுக்கு கட்சி நடத்துறான்..போட்டுத் தாக்கு என்று சொல்ல வருகிறீர்களா? மலைவாழ் மக்களை நேசித்த வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்ட, சிலை அமைக்க தமிழ்நாடு முதல்வர் அனுமதி கொடுக்கனும்.

 முந்திரிக்காடும் சரித்திரமும்

முந்திரிக்காடும் சரித்திரமும்

எங்களுக்கு ஒன்னும் இப்படி எல்லாம் கூட்டம் போட்டு பேசித்தான் ஆக வேண்டும் என்பது அல்ல.. வேல்முருகனுக்கும் வேல்முருகன் தம்பிகளுக்கும் பிரபாகரன் வழியில், தமிழரசன் வழியில், வீரப்பன் வழியிலும் களமாடத் தெரியும். என்னுடன் 50 பேர் எதற்கும் தயாராக வரமாட்டீங்களா என்ன? கட்சி தொடங்கும்போதே, வன்னிக் காடும், சந்தனக் காடும் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது; நான் சாவதற்குள் என் முந்திரிக் காடும் இடம் பெற வேண்டும் என்று சொன்னேன். ஆகையால் எங்களை மரியாதையுடன் நடத்துங்கள். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+