Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காமராஜர், ஜெயலலிதா, மூப்பனார்! மாற்று கட்சி தலைவர்கள் பெயரை சொல்லி.. மோடி பிரச்சாரம்! கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஜெயலலிதா, மூப்பனார், காமராஜர் என பிற கட்சி தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு சேலத்தில் பிரதமர் மோடி பிரச்சார மேடையில் பேசினார்.

லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த வாரம் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

PM Modi Salem BJP meeting He used Jayalalitha Moopanar and Kamarajar names in his speech

இதையடுத்து பிரதமர் மோடி இன்று சேலத்தில் பாஜக சார்பாக பிரச்சாரம் செய்கிறார். மதியம் 12.50 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வந்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி வரும் இந்த நிகழ்வில் கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட்டனர். ஓ பன்னீர்செல்வம், பாமகவின் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பங்கேற்று உள்ளனர் . அதேபோல் டிடிவி தினகரனும் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளார்.

ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். இதன் மூலம் மேடையில் பிரம்மாண்ட கூட்டணியை ஏற்றி பாஜக சாதித்து உள்ளது.

மோடி பேச்சு; இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி இந்து மதத்தை திட்டமிட்டு தாக்குகிறது. நேரம் கிடைக்கும்போது எல்லாம் இந்து மதத்தை தாக்கி வருகின்றனர். காமராஜர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். 5வது தலைமுறையும் ஆட்சிக்கு வரவேண்டும் என திமுக நினைக்கிறது. காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம் எனக்கு உத்வேகம் அளித்தது. மூப்பனாருக்கு எதிராக அரசியல் செய்தது திமுக.

இந்தியா கூட்டணி பெண்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்துகிறார்கள் என்பதற்கு தமிழ்நாடு சாட்சி. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது திமுகவினர் எப்படியெல்லாம் இழிவு செய்தார்கள்.

நாங்கள் பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்தபோது எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்துவிட்டன. தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் எனக்கும் கிடைத்து வரும் மக்கள் ஆதரவை நாடே பார்க்கிறது. கோவையில் நேற்று மக்கள் கடலில் நீந்திக்கொண்டே பயணம் செய்தேன். பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துபோய்விட்டது.

தமிழ்நாட்டு மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள். ஏப்ரல் 19ஆம் தேதி விழும் ஒவ்வொரு ஓட்டும் என்.டி.ஏ கூட்டணிக்கு என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மீண்டும் வேண்டும் மோடி என மக்கள் முடிவெடுத்துள்ளதால் வெற்றி எண்ணிக்கை நானூறை தாண்டும்.

நவீன உள் கட்டமைப்பிற்கு நானூறை தாண்ட வேண்டும். பாரதம் தன்னிறைவு பெற நானூறுக்கும் மேல் பெற வேண்டும். விவசாயிகள் பயனடைய நானூறுக்கும் மேல் பெற வேண்டும், என்று பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இதில் காமராஜர் காங்கிரஸ் கட்சி, ஜெயலலிதா அதிமுக. இரண்டு பேருமே பாஜகவுடன் கூட்டணியில் இல்லை. அதிலும் அதிமுக, காங்கிரஸ் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் நிலையில், அதே கட்சியின் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+