Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிஸ்டு கால், ஆபாச மெசேஜ், டார்ச்சர்.. சேலம் இளம் பெண் விரித்த வலையில்.. நடந்த பெரும் ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: மிஸ்டு கால் கொடுத்து, ஆபாச மேசேஜ் அனுப்பி இளம் பெண்ணை டார்ச்சர் செய்த இளைஞரை பிடிக்க விரித்த வலையில் சிக்கிய அப்பாவி இளைஞர் சிக்கினார். அந்நிலையயில் சிக்கியவரை உறவினர்கள் அடித்து உதைத்த நையப்புடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரை போலீசார் தேடி வருகிறன்றனர். இந்த சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

சேலம் அருகே பாலப்பட்டியை சேர்ந்த மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் வசிக்கிறார். மீனாவின் செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் மிஸ்டு கால் வந்திருக்கிறது.

அதே நபர், தொடர்ந்து மீனாவிற்கு மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். அதற்கு மீனா எந்த பதிலும் அளிக்காமல் கண்டுகொள்ளவில்லை.

நடந்தவற்றை கூறினார்

நடந்தவற்றை கூறினார்

இந்நிலையில் அந்த நபர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி இருக்கிறார். மேலும் போனில் தொடர்ந்து பேசி ''டார்ச்சர்'' கொடுத்துள்ளார். இறுதியில் இரவு 11 மணியளவில் வீட்டில் இருந்து வந்து விடு என அழைத்துள்ளார். அவரது தொல்லை தாங்க முடியாததால் அந்த இளம்பெண் மீனா உறவினர்களிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் காத்திருப்பு

உறவினர்கள் காத்திருப்பு

அவர்கள் யோசனைப்படி இரவு நீங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து விடுகிறேன் என்று இளம்பெண் தெரிவித்தார். அரியானூர் பிரிவு பகுதிக்கு வருமாறு அந்த நபர் கூறவே, கடந்த 28ம்தேதி இரவு அந்த பெண்ணின் உறவினர்கள் 10பேர் அந்த இடத்தில் ஆங்காங்கே பதுங்கி இருந்துள்ளனர். அப்போது டூவீலரில் ஒரு வாலிபர் வந்து, அரியானூர் பிரிவு சாலையில் நின்று செல்போனில் பேசியுள்ளார்.

தாக்குதல்

தாக்குதல்

அங்கு பதுங்கியிருந்தவர்கள், அந்த இளைஞரை சுற்றிவளைத்து பிடித்து சரமாரியாக தாக்கினர். அவரிடம் விசாரித்தபோதுதான் ஆள் மாறி தாக்கியது தெரியவந்தது. தாக்குதலுக்கு ஆளானவர் இளம்பிள்ளையை சேர்ந்த ரவிச்சந்திரன்(30) என்பது தெரியவந்தது. சேலம் கிச்சிபாளையத்தில் தாய் வீட்டுக்கு வந்திருந்த மனைவியை பார்த்துவிட்டு, சரியாக அரியானூர் பிரிவு சாலையில் வந்தபோது அவரது மனைவி செல்போனில் அழைக்கவே ஓரமாக டூவீலரை நிறுத்தி பேசி இருக்கிறார்

அப்பாவி மீது தாக்குதல்

அப்பாவி மீது தாக்குதல்

இந்நிலையில் இளம் பெண் மீனா டார்ச்சர் கொடுத்தது அவர்தான் என தவறாக நினைத்து உறவினர்கள் தாக்கியது தெரியவந்தது. இதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் அரசு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின்படி கொண்டலாம்பட்டி போலீசார், அந்த இளம்பெண் மற்றும் உறவினர்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

யார் அந்த நபர்

யார் அந்த நபர்

சினிமா பட பாணியில் ஆள் தெரியாமல் மாற்றிய தாக்கிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்கடைசி வரை டார்ச்சர் செய்த நபர் யார் என்று தெரியவில்லை. போலீசாரின் விசாரணையில் உண்மையான நபர் சிக்குவார் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+