விசாரணை வளையத்தில் சேலம் இளங்கோவன்...கோடநாடு வழக்கும் வேகம் எடுக்குமா? நெருக்கடியில் எடப்பாடி
சேலம்: அதிமுக ஆட்சிக் காலத்தில் நிழல் முதல்வர் என அழைக்கப்பட்ட சேலம் இளங்கோவன், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் விசாரணை வளையத்தில் சிக்கி இருக்கிறார். இதனையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் சேலம் இளங்கோவன் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்கின்றன தகவல்கள்.
சேலம் அருகே புத்திரகவுண்டன்பாளைத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். அதிமுகவில் ஜெயலலிதா பேரவையின் புறநகர் மாவட்ட செயலாளராக உள்ளார். மேலும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவர் பதவிகளையும் வகித்து வருகிறார்.

எடப்பாடியின் நிழல்
முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாயின் நிழலாக வலம் வந்தவர் சேலம் இளங்கோவன். 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சேலம் கூட்டுறவு வங்கி மூலம் ரூ600 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை பணப் பரிமாற்றம் செய்தார் என்கிற புகாருக்குள்ளானவர் இளங்கோவன்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு
கடந்த சட்டசபை தேர்தலின் போதும் சேலம் மாவட்ட அதிமுக வேட்பாளர்களின் செலவுகளுக்கு பொறுப்பாக இருந்தவரும் இளங்கோவன்தான். இப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சேலம் இளங்கோவன் மீது வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். அத்துடன் சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கி உள்ளனர். இந்த வரிசையில் இப்போது சேலம் இளங்கோவன் சிக்கி இருக்கிறார்.

கனகராஜ் மர்ம மரணம்
அத்துடன் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் சேலம் இளங்கோவன் பக்கம்தான் கைகள் நீட்டப்படுகின்றன. குறிப்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் மர்ம மரணம் தொடர்பாக சேலம் இளங்கோவன் எந்த நேரத்திலும் விசாரிக்கப்படலாம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. கோடநாடு பங்களாவில் எடுக்கப்பட்ட சில முக்கிய ஆவணங்கள் சேலம் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் மூலமாக இளங்கோவன், வழக்கறிஞர் ஒருவரிடம் கனகராஜ் ஒப்படைத்திருக்கிறார். அதன்பின்னரே கனகராஜ் கார் விபத்தில் மரணம் அடைந்தார் என கூறப்படுகிறது.

இளங்கோவனிடம் விசாரணை?
ஏற்கனவே கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தம்மை சிக்க வைக்க சதி நடக்கிறது என ஆளுநர் வரை புகார் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சட்டசபையிலும் இதை சுட்டிக்காட்டி பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் சிக்கி இருக்கும் இளங்கோவன், அடுத்ததாக கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாகவும் விசாரிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் தற்போதைய நிலையில் மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி உருவாகி உள்ளது; இளங்கோவன் விசாரிக்கப்படும்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications