சேலம் மாவட்டத்தில் புதிய ஆதார் கார்டு, ஆதார் திருத்தம் செய்ய போறீங்களா.. தபால் துறை குட்நியூஸ்
சேலம்: இன்றைக்கு ஆதார் கார்டு இருந்தால் தான் எந்த சேவையையும் பெற முடியும் என்கிற நிலை உருவாகி உள்ளது. ஆதார் சேவை சேலம் மாநகரில் தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரில் திருத்தம் மேற்கொள்ள எங்கெல்லாம் சேவை மையங்கள் உள்ளன என்பது குறித்து தபால்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆதார் கார்டில் செல்போன் எண் மாற்றுவது, பயோமெட்ரிக் மாற்றுவது, புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது, ஆதாரில் முகவரி மாற்றம், ஆதாரில் பெயர் திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ள ஆதார் மையத்திற்கு செல்கிறார்கள். புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க, கைரேகையை மீண்டும் பதிவு செய்ய தபால் நிலையங்களுக்கு தான் மக்கள் செல்கிறார்கள். ஆனால் எல்லா தபால்நிலையங்களிலும் அத்தகைய சேவைகள் இருப்பது இல்லை. அதேநேரம் பெரிய தபால் நிலையங்களில் அந்த சேவைகள் உள்ளன. அதேநேரம் ஆதார் சேவை வசதிகள் தபால் நிலையங்களில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் மற்றும் சேலம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும்மக்கள் எங்கெல்லாம் ஆதார் சேவை பெறலாம் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "சேலம் கிழக்கு கோட்டம் தபால் துறையின் கீழ் 42 ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சேலம் தலைமை தபால் அலுவலகம், அஸ்தம்பட்டி துணை தபால் அலுவலகத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் சேவை வழங்கப்படுகிறது.
மேலும் ஆத்தூர், ஏற்காடு, அயோத்தியாப்பட்டணம், அம்மாப்பேட்டை, வாழப்பாடி, சேலம் தெற்கு, தலைவாசல், பேர்லண்ட்ஸ், அழகாபுரம், செவ்வாய்பேட்டை, பேளூர், காமராஜர் நகர் காலனி, காரிப்பட்டி, கெங்கவல்லி, சுக்கம்பட்டி, ஆட்டையாம்பட்டி, கொண்டலாம்பட்டி, மல்லூர், ஒண்டிக்கடை, வீரபாண்டி, மல்லியகரை, நரசிங்கபுரம், வடசென்னிமலை, பெத்தநாயக்கன்பாளையம், வீரகனூர் மற்றும் ஏத்தாப்பூர் உள்ளிட்ட அனைத்து துணை அஞ்சலகங்களிலும் அலுவலக நேரங்களில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
ஆதார் புதியதாக பதிவு பெறுவதற்கு கட்டணம் ஏதும் இல்லை. பெயர் திருத்தம், முகவரி திருத்தம், செல்போன் எண் மாற்றம் போன்ற மற்ற சேவைகளுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை ஆதார் கட்டணமாக வசூலிக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுடைய ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள தங்களது அசல் ஆவணங்களை எடுத்து கொண்டு அருகில் உள்ள ஏதேனும் ஒரு தலைமை அல்லது துணை தபால் நிலையங்களில் உள்ள ஆதார் சேவை மையத்துக்கு சென்று பயன்படுத்திக் கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications