அலங்கோலமான "அலங்கார" பழங்கள்.. அப்பதான் கிளம்பிய எடப்பாடி.. சேலத்தில் "பங்கமா" போச்சு... காரணம் என்ன
சேலம்: சேலத்தில் நடந்த நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் என்ன நடந்தது? பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கார் செல்லக்கூட வழியில்லாத அளவுக்கு, நெரிசலுக்கு என்ன காரணம்?
தமிழகமெங்கும் வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது.. அதிலும் ஈரோடு, சேலம் மாவட்டத்தில், வெயில் கொடுமையை கேட்கவே வேண்டாம்.. 108 டிகிரியை தாண்டி மிரட்டி கொண்டிருக்கிறது.. பிற்பகலில் அனல் காற்று வீசுகிறது.. அதனால்தான், தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

சேலம், ஈரோடு: இந்த நிலையில் சேலம் சூரமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்..
சேலம் ரயில் நிலையம் எதிரே இருக்கக்கூடிய பகுதியில், நீர்மோர் பந்தல் இதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது... இங்கு மக்களுக்கு தேவையான குடிநீர், நீர் மோர், பழங்கள், நுங்கு, இளநீர், குளிர்பானம் போன்றவை அதிகமாகவே கிடைக்கும் வகையில் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதனை சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்..
தர்பூசணி: அங்குள்ள பெண்களுக்கு நீர்மோர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கி, இந்த நீர்மோர் பந்தலை துவக்கி வைத்தார்.. இதில், சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
அப்போது எடப்பாடி பேசும்போது, இதைப்போலவே பல இடங்களில் நீர்மோர் பந்தலை திறக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார். பிறகு பொதுமக்களுக்கு பிறகு, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, கம்மங்கூழ், நுங்கு, இளநீர் போன்றவற்றை வழங்கியதுடன், யாரும் தேவையில்லாமல் வெயிலில் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள்: பின்னர், பொதுமக்கள் அனைவரும் வெயிலில் நின்றபடியே பழங்களை வாங்கி சென்றனர்.. பெரிய மேஜையில் பழங்கள், தர்பூசணி, நுங்கு என ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தது.. வரிசையில் பொதுமக்கள் திரண்டு வந்தாலும், அங்கு சலசலப்பு ஏற்பட்டு கொண்டேயிருந்தது.. முண்டியடிக்கும் பொதுமக்களை பார்த்து எடப்பாடி பழனிசாமி சமாதானம் செய்து கொண்டேயிருந்தார்.. அனைவரையும் பொறுமை காக்கும்படி சொல்லி கொண்டிருந்தார்.
சிலருக்கு தர்பூசணி, நுங்கு எடுத்து தந்தார்.. மேலும் சிலருக்கு பழங்களையும், இளநீரையும் தந்தார்.. சில நிமிடங்களில் இவைகள் காலியாகிவிட்டதால், அங்கு வைக்கப்பட்டிருந்த மோர் டிரம்மை திறந்து, டம்ளர்களில் அனைவருக்கும் மோர் ஊற்றிக் கொடுத்தார் எடப்பாடி.. நிறைய பேர், பழங்களை வாங்கி செல்ல கையில் பெரிய பெரிய தட்டுகளுடன் திரண்டிருந்தனர்.
அதிகரித்த கூட்டம்: எனினும், நேரம் ஆக ஆக பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து கொண்டேயிருந்ததால், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் பழங்களை வழங்கிய எடப்பாடி, ஒரு டவலால் தன்னுடைய கைகளை துடைத்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்பினார்.
எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து கிளம்பிய அடுத்த செகண்டே, நீர்மோர் பந்தலில் அதிமுகவினர் திரண்டுகொண்டனர்.. நீர்மோர் வாங்க பந்தலுக்குள் குபுகுபுவென புகுந்துவிட்டதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
வீடியோ: அதாவது நிகழ்ச்சி திறப்பு விழா என்பதால், அலங்காரத்திற்காக தொங்கவிட்டிருந்த பழங்கள், இளநீர் போன்றவற்றை பறித்து செல்வதற்காக தள்ளுமுள்ளுவே நடந்துவிட்டது.. அந்த இடத்திலிருந்து எடப்பாடியின் கார் நகரகூட முடியவில்லை.. காருக்கு கூட வழிவிடாமல் பொதுமக்கள் முண்டியடிக்க துவங்கிவிட்டனர். இதில், அதிமுக தொண்டர்களும் இணைந்துகொண்டனர்..
இந்த நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது ஜங்ஷன் பிரதான சாலை என்பதால், டிராபிக் ஜாமும் ஏற்பட்டுவிட்டது. இதனால், பெரும் முயற்சிக்கு பிறகு, போக்குவரத்தை போலீசார் சீர்படுத்தினார்கள்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications