சேலம் ஆத்தூரில் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடங்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சேலம்: சேலம் ஆத்தூரில் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் நான்கு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த வி மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள காமராஜர் சாலையில் சட்ட விரோதமாக அனுமதி இன்றி 12க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த கட்டிடத்தில் தனியார் கண் மருத்துவமனைகள், வங்கிகள், ஜவுளிக்கடைகள், மற்றும் நகைக்கடை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்களுக்கு நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பி அபராதம் விதித்துள்ளனர். அதற்கு அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்களும் அபராதம் செலுத்தியுள்ளனர்
இதனுடைய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி சில விளக்கங்கள் கேட்டு இருந்தேன். அப்போது நடவடிக்கை எடுப்பதாக ஆத்தூர் நகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்து கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நகராட்சி ஆணையிடம் மனு கொடுத்தேன். அந்த மனு மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே நீதிமன்றம் இதில் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி கிருஷ்ணகுமார் நீதிபதி குமரேஷ்பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.முருகபாரதி ஆஜராகி, மனுதாரர் கொடுத்த கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.
இந்த வழக்கில் நான்கு வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆத்தூர் நகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications