சேலத்தில் மேரி வீட்டில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அதுவும் சேலம் பஸ் ஸ்டாண்டு கிட்ட? ஆத்தூரில் யாரந்த 2 பேர்
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் ஸ்டாண்டிலேயே இப்படியொரு சம்பவம் இதுநாள் வரை நடந்து கொண்டிருந்ததா? என்று அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைதாகி உள்ளதுடன், அவர்களிடம் விசாரணையையும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.. !!
தர்மபுரி மாவட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து சொல்வதாகவும், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளை அழைத்து சென்று, வீட்டில் வைத்து ஸ்கேன் செய்து, பாலினத்தை கண்டறிந்து கூறுவதாகவும், தர்மபுரி மாவட்ட இணை இயக்குனர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தர்மபுரி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையில், மருத்துவ குழுவினர் தர்மபுரியிலிருந்து இருந்து கள்ளக்குறிச்சிக்கு விரைந்து சென்றனர்..
அதிரடி சோதனை: அங்கு குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனையை நடத்தியதுடன், ரஞ்சித் என்பவரையும் இது தொடர்பாக கைது செய்தனர். பிறகு ரஞ்சித்திடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, சேலம் மாவட்டம், ஆத்தூர், பஸ் ஸ்டாண்ட் அருகில், மேரி என்பவர் வீட்டில் வைத்து, கர்ப்பிணிக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறியக்கூடிய ஸ்கேன் எடுக்கப்படுவதாக ரஞ்சித் தன்னுடைய வாக்குமூலத்தில் கூறினார்.
இதனால், ஆத்தூர் பகுதியில், மேற்கு மாதாகோவில் தெருவில் சத்யா என்பவரது வீட்டில், அக்கிசெட்டிபாளையத்தை சேர்ந்த கருணாநிதி மகன் சௌந்தர்ராஜன், கருவிலுள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிய ஸ்கேன் மெஷின் வைத்திருந்ததையும், கருக்கலைப்புக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வைத்திருந்ததையும், மருத்துவ குழுவினர் கண்டறிந்தனர்.
ஸ்கேன்: சௌந்தர்ராஜனிடம் நடைபெற்ற விசாரணையில், ஆத்தூர் கோட்டை பகுதியை சேர்ந்த முனியன் மகன் வெங்கட்ராமன் (எ) வெங்கடேஷ் என்பவர் மூலம் கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து ஸ்கேன் செய்ததும் தெரியவந்தது.
அதாவது, கர்ப்பிணி ஒருவருக்கு அபார்ஷன் செய்ய வேண்டுமானால், அதற்கு 12 ஆயிரம் ரூபாயை இவர்கள் வசூலித்து வந்துள்ளார்கள்.. இறுதியில், மேற்கண்ட சம்பவங்கள் சம்பந்தமாக ஆத்தூர் டவுன் போலீசுக்கு தர்மபுரி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் சாந்தி தகவல் தெரிவித்ததையடுத்து, சௌந்தரராஜன்(48), வெங்கடேஷ்(45) ஆகிய இருவரையும் டவுன் போலீசார் கைது செய்துள்ளனர்..
பரபரப்பு: அவர்களிடமிருந்து ஸ்கேன் மிஷின்கள், மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், கைதான 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆத்தூர் பஸ் ஸ்டாண்டிலேயே இப்படியொரு அபார்ஷன்கள் இத்தனை காலமும் நடந்து வந்துள்ளது, மிகப்பெரிய பரபரப்பை சேலத்தில் தந்து வருகிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications