சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்போலாம் யார் ஜாதி பார்க்கிறாங்க? கோவிலுக்கு தலித் போக கூடாது! 40 ஆண்டு கொடுமை.. தமிழ்நாட்டுலதான்!

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடகுமரை கிராமத்தில் தலித் பிரிவினர் 40 வருடமாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உச்சத்தில் இப்போதும் இருக்கும் சாதி கொடுமைகள் பற்றி பேசும் போதெல்லாம்.. சிலர் ஜாதி எல்லாம் இப்பவும் இருக்கா என்று கேட்பார்கள். ரிஸர்வேஷனை ஒழிக்க வேண்டும்.. ஜாதி எல்லாம் இப்பவும் இல்லை.. இப்போல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறாங்க என்று "டெம்பிளேட்" வசனத்தை தூக்கிக்கொண்டு வருவார்கள்.

ஆனால் தலித் என்பதற்காக ஓரம்கட்டப்படுவதும்.. ஜாதி மாறி திருமணம் செய்வதால் ஆணவக்கொலை செய்யப்படுவதும் இப்போதும்.. இந்த நொடியிலும் இந்தியாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பாலியல் புகார் கொடுக்க சென்ற.. தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போலீசாரின் அராஜகம்.. ம.பி பயங்கரம்!பாலியல் புகார் கொடுக்க சென்ற.. தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போலீசாரின் அராஜகம்.. ம.பி பயங்கரம்!

ஜாதி கொடுமை

ஜாதி கொடுமை

இந்தியாவில் இன்னும் முடியாத ஜாதி கொடுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் கிராமம்தான் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடகுமரை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 3000 மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு காளகஸ்தீஷ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில்கள் இருக்கின்றன. இரண்டு கோவில்களும் மிகவும் பிரபலமான கோவில்கள் ஆகும். இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

கோவில்

கோவில்

ஆனால் இப்பகுதியை சேர்ந்த இடைநிலை சாதியினர், ஓசி பிரிவினர்.. அப்பகுதி தலித் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்கவே இல்லை. இவர்கள் கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்ய அப்பகுதி மாற்று ஜாதியினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தனர். கோவிலுக்கு வெளியே நின்றுதான் இவர்கள் சாமி கும்பிட வேண்டும் என்று தொடர்ந்து இவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வந்தது. கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஊர் "பெரியவர்கள்" விதித்த கட்டுப்பாடு காரணமாக தலித் மக்களுக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டு வந்ததில்லை.

இடைநிலை ஜாதி

இடைநிலை ஜாதி

ஒன்றல்ல இரண்டல்ல.. கடந்த 40 வருடமாக இந்த கொடுமை அங்கு நிலவி வந்தது. ஏதாவது பூஜை செய்ய வேண்டும் என்றால் கூட இந்த ஊர் மக்கள் பக்கத்துக்கு கிராமங்களில் உள்ள கோவில்களுக்கு செல்லும் நிலைதான் ஏற்பட்டது. இப்பகுதி மக்கள் இதற்கு எதிராக பல காலமாக போராடி வந்தனர். பிறப்பில் என்ன ஜாதி.. தலித் என்றால் கோவிலுக்கு செல்ல கூடாதா? சாமி உங்களிடம் சொன்னதா? என்று மக்கள் கேள்விகளை எழுப்பினர்.

போராட்டம்

போராட்டம்

இந்த ஜாதி அழுத்தம் காரணமாக சிலர்.. இப்படிப்பட்ட இழிநிலையை எதிர்கொள்வதெற்கு பதிலாக வேறு மதத்திற்கு மாறிவிடலாமா என்றும் கூட எண்ணும் அளவிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் அப்பகுதி தலித் மக்கள் தங்கள் உரிமைக்காக உடனடியாக போராட்டம் செய்தனர். ஆனால் அதை எதிர்த்து அப்பகுதி மாற்று சாதியினர் எதிர் போராட்டம் நடத்தினர்.

வழக்கு

வழக்கு

இதனால் அங்கு பதற்றம் ஏற்படவே போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் கந்தசாமி என்பவர், அந்த கோவில் நிலம் என்னுடையது என்று வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை, கோவிலில் அதே நிலை நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தை அப்போதுதான் விசிக தலைவர் திருமாவளவன் கையில் எடுத்தார்.

 தீர்ப்பு

தீர்ப்பு

அதில், அவர் ஆலய நுழைவு போராட்டத்தை நடத்த போவதாக கூறினார். ஆனால் தமிழ்நாடு அரசோ, வழக்கு நிலுவையில் இருப்பதால் போராட்டத்திற்கு அப்போது அனுமதி தரவில்லை. இந்த நிலையில்தான் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தலித் மக்களும் கோவிலுக்கு செல்லலாம் என்று அனுமதி அளித்தது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் என்பதால் தலித் மக்கள் கோவிலுக்கு செல்லலாம் என்று உத்தரவிட்டது.

வெற்றி

வெற்றி

இதையடுத்து நேற்று தலித் பிரிவை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு சென்று முதல்முறையாக வழிபாடு நடத்தினார்கள். அதோடு கோவில் சொத்துக்கள், உபகரணங்கள், வடசென்னிமலை தக்கரிடம் வழங்கப்பட்டது. ஜாதி இல்லை என்று பலர் கூச்சலிடும் நிலையில் 40 வருடங்களாக.. "முன்னேறிய" தமிழ்நாட்டில் கூட ஒரு கோவிலில் தொடர்ந்து ஜாதி கொடுமை நடந்து வந்தது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Salem: Dalits gets their right to enter to a temple after 40 years of struggle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X