மூட்டு வலி முதல் கொரோனா தொற்று வரை.. ஓலைச்சுவடிகள் மூலம் மருந்து தயாரிப்பு.. இளம்பெண் அசத்தல்
சேலம்: சேலம் மாவட்டத்தில் இயற்கை மருத்துவத்தால் பலன் அடைந்த இளம்பெண் ஒருவர் இயற்கை அங்காடி அமைத்து சேவையாற்றி வருகிறார்.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி பகுதியில் மருதம் இயற்கை தயாரிப்புகள் என்ற பெயரில் இயற்கை அங்காடி உள்ளது. இங்கு இயற்கை மூலிகை வைத்தியத்தை பயன்படுத்தி நோய்த்தொற்று காலத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தியையும் கோவிட் நோய் தொற்றை எதிர்க்கும் வல்லமையையும் அதிகரிக்க ஓலைச்சுவடியில் உள்ள மருத்துவ குறிப்புகள் கொண்டு மருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த மருந்தை நங்கவள்ளி பகுதி பொது மக்களுக்கு வழங்கி வருவதாக அப்பகுதியை சேர்ந்த இளம் பெண் சரண்யா தெரிவித்துள்ளார்.
டெல்லி பாஜக பிரசார பேனரில் குடிசைவாசியாக தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் படம்- புதிய சர்ச்சை

இயற்கை முறை
கடந்த சில மாதங்களாக தான் சொந்தமாக இயற்கை முறையில் ஓலைச்சுவடிகளில் உள்ள மருத்துவ குறிப்புகளை கொண்டு பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் மிகவும் குறைந்த செலவில் சொந்த முயற்சியில் பல்பொடி, ஆடாதோடை மணப்பாகு, செம்பருத்தி மணப்பாகு, மூலிகை எண்ணெய், இடுப்பு முதுகு தண்டு வலியை போக்கும் பிரண்டை எண்ணெய், முடக்கத்தான் எண்ணெய், மூட்டு வலி முற்றிலுமாக போக்கும் வகையில் இயற்கை சார்ந்த பொருட்களை தயாரித்து வருகிறார்.

மருந்து பொருட்கள்
உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் இந்த மருந்து பொருட்களை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார் மேலும் சோப்பு வகைகள், குப்பைமேனி, ஆவாரம் பூ சூப், கற்றாழை ஃபேஸ் மாஸ்க், மூலிகை தேமல் வண்டுகடி, அல்சர், சர்க்கரை வியாதி உள்ளிட்ட வியாதிகளுக்கு ஓலைச்சுவடி மூலம் மருந்து குறிப்புகளை கொண்டு மருந்து தயாரித்து வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

மூலப்பொருட்கள்
வேறு பணியாட்கள் வைத்தால் உரிய அளவிலான மூலப் பொருட்களை தயாரிப்பதில் ஏற்றத்தாழ்வு இருக்கும். இதனை கவனத்தில் கொண்டு தங்களது குடும்பத்தில் உள்ள தனது கணவர் மற்றும் குழந்தைகள், நண்பர்கள் என நான்கு பேர் இணைந்து நங்கவள்ளி பகுதியில் கிடைக்கும் இயற்கையின் பொக்கிஷமான மூலிகை செடிகளை கொண்டு மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஓமலூர்
மேலும் எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், மேச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு அதிகாரிகள் காவல்துறையினர் அதிக அளவிலான இந்த இயற்கை மருந்து பொருட்களை வாங்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் தங்களுக்கு மருந்து வேண்டி தொலைபேசி வாயிலாகவும் கடிதங்கள் வாயிலாகவும் தொடர்ந்து எங்களுக்கு அழைப்புகள் வந்த வண்ணமாகவே இருக்கிறது.

கொரோனாவுக்கு சூப்
முதன்முதலில் இந்த இயற்கை மருத்துவத்தை தொடங்கியபோதிலிருந்து தற்போது வரை தனது குடும்பத்தார் தனது நண்பர்கள் உதவிகரமாக இருந்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும் நங்கவள்ளி பகுதியில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் இலவசமாக Covid19 காலம் தொடங்கி இன்றுவரை அனைவருக்கு Covid19 மீண்டு எழுவதற்கு ஆரோக்கியம் கலந்த சூப் வகைகளை தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருவதாக சரண்யா தெரிவித்தார். இயற்கை மூலிகைகளைக் கொண்டு அனைவரின் உடல் ஆரோக்கியத்தையும் பேணிக் காக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய சாதனைப் பெண்மணி சரண்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் அப்பகுதி மக்கள்.