சேலத்துக்கு நற்செய்தி.. "இவ்ளோதானா? இன்னும் இருக்கா?".. எடப்பாடியை முந்துகிறாரா ஸ்டாலின்? 4 வருது
சேலம்: சேலம் மாநகரத்துக்கு ஹேப்பி செய்தி ஒன்று வந்துள்ளது.. இதனால் மாம்பழம் நகரம் தவிர, பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இந்த செய்தியானது மகிழ்ச்சியை தந்து வருகிறது.
பாலங்கள் என்றாலே சென்னைதான் முதலிடத்தை பிடிக்கிறது.. இதற்கு அடுத்தபடியாக கோவை மாநகரம் உள்ளது.. 3வது இடத்தை தக்கவைக்க, ஒருபக்கம் மதுரை, இன்னொரு பக்கம் சேலம், திருச்சி என மும்முரமாகி கொண்டிருக்கின்றன.

சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா 2016 பிப்ரவரி 25ம் தேதி, 320 கோடி ரூபாய் ஒதுக்கி அடிக்கல் நாட்டியிருந்தார்.. அந்த நேரத்தில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஈரடுக்கு மேம்பாலம்: கடந்த ஆட்சிகாலத்தில், தான் முதல்வராக இருந்தபோது, இந்த பாலத்தை, எடப்பாடியே திறந்து வைத்தார்.. தமிழகத்தின் மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலம் என்ற சிறப்பையும் இந்த பாலம் பெற்றுள்ளது. நான்கு ரோடு, ஐந்து ரோடு, ஜங்ஷன் என சேலத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசல், இந்த ஈரடுக்கு பாலத்தினால் குறையவும் செய்தது.
இந்த பாலம் திறப்பு விழாவில் எடப்பாடி பேசியபோது, "இந்த பாலம் திட்டங்கள் எல்லாமே, நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது சேலம் மக்கள் என்னிடம் முன்வைத்த கோரிக்கைகளாகும்.. அந்த கோரிக்கையைதான், நான் அம்மாவிடம் தந்தேன்.. அவரும் அதை பார்த்துவிட்டு, இவ்வளவு தான் பாலமா? இன்னும் இருக்கிறதா? என்று கேட்டார்.. ஒப்புதலும் தந்தார் என்று நெகிழ்ந்து கூறியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக சாதனை: ஆனால், தற்போதைய திமுக அரசோ, சேலத்தில் மொத்தம் 4 பாலங்களை கையில் எடுத்து, அதிமுகவின் சாதனையை முறியடித்து வருகிறது.. ஏற்கனவே, சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி + காக்காபாளையம் என்று 2 இடங்களில் மேம்பாலங்கள் ரெடியாகி உள்ளன. இதில், மகுடஞ்சாவடி மேம்பாலம், பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், காக்காபாளையம் மேம்பாலம் பணியும் விரைவில் திறக்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால், இதைத்தவிர, சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, 4 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாம்..
4 மேம்பாலங்கள்: அதாவது, நெய்க்காரப்பட்டி, வைகுந்தம், கத்தேரி, குமாரபாளையம் போன்ற இடங்களில், கிட்டத்தட்ட 1௦6 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலங்கள் அமைக்கவும் பிளான்கள் தயாராகி உள்ளன.. இந்த மேம்பாலங்கள் வருவதினால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், விபத்துக்களும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.. அதைவிட முக்கியமாக, சேலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளும் வேற லெவலுக்கு உயர்ந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications