சேலத்தில் கொத்தனார் கேட்ட கேள்வி.. "நிஜமாவே மாசமா இருக்கியா".. திகைத்த திருச்சி பெண்.. போலீஸ் சபாஷ்
சேலம்: கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி துவங்கிய வழக்கின் விசாரணை ஒன்று, க்ளூ எதுவுமே கிடைக்காமல் சிக்கலை தந்துவிட்டது. எனினும் நம்முடைய சமயபுரம் போலீசாரின் தீவிரமான பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்திருக்கிறார்கள்.
திருச்சியில் கர்ப்பமடைந்ததாகக் கூறி, கருக்கலைப்பு செய்யவேண்டுமென 13 ஆயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாகப் பெண்ணை சேலையால் கழுத்து நெரித்து கொத்தனார் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் பைபாஸ் ரோட்டில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது.. அங்கிருந்த முட்புதரில், அந்த பெண்ணின் சடலத்தை யாரோ வீசிவிட்டு சென்றிருக்கிறார்கள்.. 40 வயது மதிக்கத்தக்க, அந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காகவும் அனுப்பி வைத்திருந்தனர்.
ஒரு க்ளூவும் கிடைக்கல
இறுதியில், அந்த பெண் மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருந்தது.. இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட பெண் யார்? கொலையாளி யார்? என்ற விசாரணையும் நடந்தது..
இதற்காக பல்வேறு மாவட்ட போலீசாரின் உதவியையும் சமயபுரம் காவல்துறையினர் நாடினார்கள்.. இறுதியில், சம்பந்தப்பட்ட நபரை திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் சுற்றிவளைத்து கைது செய்துவிட்டனர். பிறகு, அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகின .
கொத்தனார் வேலை
கைதான நபர் சேலம் மாவட்டம் தலைவாசலை சேர்ந்த விக்னேஷ்.. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. கொத்தனார் வேலை பார்க்கிறார்.. இதனால் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று, கொத்தனார் வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போதுதான், திருச்சி ஸ்ரீரங்கம் சென்றிருக்கிறார்.. அங்கே யாசகம் வாங்கி பிழைப்பு நடத்தி வந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவரை பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த அப்பெண்ணுடன், விக்னேஷ் நெருங்கி பழகி உள்ளார்.. இதனால அந்த பெண் கர்ப்பமடைந்ததாக தெரிகிறது. எனவே விக்னேஷிடம், அபார்ஷன் செய்வதற்கு ரூ.13 ஆயிரம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.. விக்னேஷும் அந்த பணத்தை தந்துள்ளார். ஆனால், அதற்கு பிறகு, விக்னேஷுடன் பேசுவதை அந்த பெண் நிறுத்திவிட்டாராம்.
உண்மையிலேயே மாசமாக இருக்கியா?
இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், சம்பவத்தன்று அந்த பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து, நிஜமாகவே கர்ப்பமாக இருக்கிறாயா? கருவை கலைக்க பணம் வாங்கியதுமே, ஏன் என்னிடம் பேசவில்லை?' என்று கேட்டு தகராறு செய்துள்ளார்..
இதனால் இருவருக்குமே வாக்குவாதம் வெடித்துள்ளது. ஒருகட்டத்தில் ஆவேசம் அடைந்த விக்னேஷ், பெண்ணின் சேலையால் அவரது கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டாராம். இவையெல்லாம் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, விக்னேஷை போலீசார் திருச்சி ஜெயிலில் அடைத்துள்ளனர்..!!












Click it and Unblock the Notifications