Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலம் ஹோட்டல்ல ரூம்ல யார் பாருங்க.. அதென்ன பாக்கெட்டில்?.. படுக்கையறையில் பெண்ணுக்கு "நீட்" சந்தேகம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: இளம்பெண்ணை, ஹோட்டலில் ரூம் போட்டு அழைத்து சென்றுள்ளார் அந்த நபர்.. ரூமுக்குள் நுழைந்ததுமே, கத்தியை எடுத்து, அந்த பெண்ணின் வயிற்றில் குத்த, அந்த பெண்ணும் கத்தியை எடுத்து பதிலுக்கு நபரை தாக்க.. ஒரே கலவரமாகிவிட்டது.. நம்ம சேலத்தில்தான்..!!

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அந்த 19 வயது இளம்பெண்.. சேலத்திலேயே தங்கி நீட் தேர்வுக்காக, அங்கிருக்கும் கோச்சிங் சென்டரில் படித்து வருகிறார்.. இவர் சில நாட்களுக்கு முன், புது பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்.. அப்போது, அவரது வீட்டுக்கு போன் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அவரது செல்போனில் பேலன்ஸ் இல்லை.

Salem Neet Exam Student and Why did young woman take this sudden decision

செல்போன் நம்பர்: எனவே, அந்த வழியாக வந்த 40 வயது மதிக்கத்தக்க நபரிடம், ஒரு நிமிடம் செல்போன் தரும்படியும், தன்னுடைய வீட்டுக்கு பேசிவிட்டு தருவதாகவும், அந்த பெண் உதவி கேட்டுள்ளார். உடனே அந்த நபரும் செல்போனை தந்து உதவியுள்ளார்.

பிறகு, அந்த பெண்ணிடம், தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.. தன்னுடைய பெய சக்திதாசன் என்றும், தர்மபுரி மாவட்டம், அக்ரகாரம் எட்டிப்பட்டி அழகிரி நகரில் வசித்து வருவதாகவும் சொல்லி உள்ளார். பதிலுக்கு இந்த பெண்ணும், நீட் தேர்வுக்காக, கோச்சிங் சென்டரில் படித்து வருவதாக சொல்லி உள்ளார்.

சக்திதாசன்: உடனே சக்திதாசன், தான் எம்.எஸ்சி., விலங்கியல், பி.எச்டி. முடித்துள்ளதால், நீட் தேர்வுக்காக உதவி செய்வதாக சொல்லியிருக்கிறார். இதையடுத்து, 2 பேருமே செல்போன் நம்பர்களை பரிமாறி கொண்டு, அடிக்கடி பேசி வந்திருக்கிறார்கள்.. ஒருமுறை, அந்த பெண்ணுக்கு, ரூ.4500 ரூபாய் டியூஷன் பணத்தையும் சக்திதாசன் கொடுத்து உதவியிருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில், 2 நாளைக்கு முன்பு சக்திதாசன், அப்பெண்ணுக்கு போனை போட்டு, "வேலை விஷயமாக, தர்மபுரியில் இருந்து, சேலத்துக்கு வருவதாகவும், புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருப்பதாகவும், நீட் தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஹோட்டல் ரூமுக்கு வந்து கேட்குமாறும் சொன்னார்.

சந்தேகம்: அதன்படியே இளம்பெண்ணும், அவர் தங்கியிருந்த ஹோட்டல் ரூமுக்கு சென்றார்.. நீட் தேர்வு தொடர்பாக, சக்திதாசனும் அவருக்கு சந்தேகத்தை தீர்த்து கொண்டிருந்தார்..

பிறகு, திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் சக்திதாசன்.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. ஆனால் சக்திதாசனோ, பாக்கெட்டிலிருந்து கத்தியை கையில் எடுத்துவிட்டார்.. அந்த பெண்ணை பணியும்படியும், ஆசைக்கு இணங்கும்படியும் மிரட்டியிருக்கிறார்.

ஆனால், அப்பெண் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கவும், 2 பேருக்கும் கடுமையான மோதல் வெடித்தது.. ஒருகட்டத்தில், இளம்பெண்ணை சக்திதாசன் கத்தியால் குத்தினார்.. இதில், அந்த பெண்ணுக்கு கத்திகுத்து ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. உடனே ஆத்திரமடைந்த இளம்பெண், சக்திதாசனிடம் இருந்து கத்தியை பிடுங்கி, அவரை சரமாரியாக குத்திவிட்டு, ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தார்..

கத்திகுத்து: இதனை பார்த்த ஹோட்டல் ஊழியர்கள், அழகாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் விரைந்து வந்து, வயிற்றில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த சக்திதாசனையும், படுகாயத்துடன் இருந்த இளம்பெண்ணையும் மீட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதித்தனர்..

இப்போது 2 பேருக்கு தீவிர சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறதாம்.. 2 பேருமே சீரியஸாக இருக்கிறார்களாம். இதில், சக்திதாசனின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக சொல்கிறார்கள்..

சக்திதாசனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையாம்.. உண்மையிலேயே அவர் என்ன படித்திருக்கிறார் என்று தெரியவில்லை.. ஆனால், வீட்டு கடன், விவசாய கடனை வாங்கி கொடுத்து, அதில் கிடைக்கும் கமிஷனை வைத்து பிழைப்பு நடத்தி வருபவராம்.. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை சேலத்தில் உண்டுபண்ணியிருக்கும் நிலையில், விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆக, இந்த "நீட் தேர்வு" எந்த ரூபத்தில் வந்தாலும், பிள்ளைகளுக்கு ஆபத்துதான் போல..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+