வனவிலங்கு வேட்டை! திடீர் மோதலில் நடந்த சம்பவம்! மீனவர் ராஜா கொல்லப்பட்ட விவகாரம்! சேலம் எஸ்பி பரபர
தமிழக மீனவர் சுடப்பட்ட விவகாரத்தில் சேலம் எஸ்பி சிவக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சேலம்: மீன்பிடிக்கச் சென்ற ராஜா என்பவரைக் கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்றதாகத் தகவல் வெளியான நிலையில், இது எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து சேலம் எஸ்பி சிவக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அடிப்பாலாறு பகுதியில் தமிழக மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படித்தான் கடந்த 14ஆம் தேதி சிலர் அங்கு மீன் பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது திடீரென கர்நாடக வனத்துறையினர் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்குச் சென்ற பலரும் தப்பியோடி வந்துவிட்டனர்.

உயிரிழப்பு
இருப்பினும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா என்பவரை காணவில்லை.. இதனால் அஞ்சிய அவரது உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். இதற்கிடையே இரண்டு நாட்களுக்கு முன்பு, அடி பாலாறு காவிரி ஆறு பகுதியில் மீனவர் ராஜாவின் சடலம் மிதந்து வந்தது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. தமிழக மீனவரைக் கர்நாடக போலீசார் சுட்டுக் கொன்றதாகத் தகவல் பரவியதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.. இரு மாநிலங்களுக்கும் இடையேயான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

பிரேதப் பரிசோதனை
கர்நாடக மீனவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் சீமான் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே ராஜாவின் உடலை வாங்க அவரது குடும்பத்தினர் மறுத்த நிலையில், போலீஸ் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடலை வாங்க ஒப்புக் கொண்டனர். பிரேதப் பரிசோதனையில் ராஜாவின் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட தடயம் இல்லை எனத் தகவல் வெளியானது. இதனால் ராஜாவின் உறவினர்கள் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலம் எஸ்பி
அதேநேரம் மீனவர் ராஜாவும், அவரது நண்பர்களும் வனப்பகுதியில் மான் வேட்டையாடியதால் வானத்தை நோக்கிச் சுட்டதாகக் கர்நாடக வனத்துறையினர் கூறியிருந்தனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகச் சேலம் எஸ்பி சிவக்குமார் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஜா குறித்து விசாரணை செய்ததில், ராஜா வனவிலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

வனவிலங்கு வேட்டை
இதே போல், 2014ஆம் ஆண்டு கோவிந்தபடியைச் சேர்ந்த பழனி என்பவருடன் கர்நாடக மாநிலம் கோபிநத்தம் வனப்பகுதிக்கு வேட்டைக்குச் சென்றபோது வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பழனி உயிரிழந்துவிட்டார்.அப்போது, ராஜா தப்பித்து வந்து ஊர் மக்களிடம் தகவல் தெரிவித்ததால், பொதுமக்கள் கோபம் அடைந்த கர்நாடக வனத்துறையினரின் சோதனைச் சாவடியைச் சேதப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து மாதேஸ்வரன் மலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீர்மானம்
மேலும், ராஜா தொடர்ந்து இதேபோல் வனவிலங்கு வேட்டையாடும் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக ஈரோடு சென்னம்பட்டி வனச்சரகத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் அரிசி பாளையம் கிராமத்தில் இவர் மீது வனவிலங்கு வேட்டையாடும் குற்றங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி தீர்மானம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது. அவ்வாறு இருந்தும் மீண்டும் வனப்பகுதிக்குச் சென்றதால் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications