கல்யாணமான ஆண்களை.. இப்படியெல்லாமா ஏமாற்ற முடியும்? கூடலூர் கல்யாண ராணி குறித்து திடுக் தகவல்
சேலம்: கல்யாணமான ஆண்களை குறிவைத்து ஏமாற்றிய புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கூடலூர் ரசீதா குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான படங்களை அடிக்கடி பதிவிட்டு எப்படி ஆண்களை மோசடி செய்தார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே எம்.செட்டிப்பட்டியை சேர்ந்த 30 வயதாகும் மூர்த்தி அந்த பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் அண்மையில் ஓமலூர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த மனுவில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலாவை சேர்ந்த ரசீதா (36) என்ற பெண்ணுக்கும் எனக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அழகுக்கலை நிபுணராக வேலை செய்து வருகிறார். ரசீதாவிற்கும் எனக்கும் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி ஓமலூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் நடந்தது.

என்னுடன் சில நாட்கள் குடும்பம் நடத்திய அவர், திடீரென மாயமாகிவிட்டார் ரசீதா பற்றி அவரது உறவினர்களிடம் விசாரித்த போது, அவர் ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து கொண்டதும், என்னை 3-வதாக திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதும் தெரிய வந்தது. அவர் என்னுடைய 4 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை எடுத்துக் கொண்டு எஸ்கேப் விட்டார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.
இதுகுறித்து தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசீதா குறித்து விசாரித்தார்கள். அப்போது ரசீதா குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி போலீசார் வெளியிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
பியூட்டி பார்லர் தொழில் செய்துவந்தவர் ரசீதா, இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான உடைகளை அணிந்து தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.இதனால் ரசீதாவின் புகைப்படங்களை பார்த்து பலரும்கமெண்ட் போட்டிருக்கிறார்கள். அந்த வகையில் ரசீதாவின் புகைப்படங்களை பார்த்து அவரது அழகில் மூர்த்தி மயங்கி உள்ளார். அதன்பிறகு இருவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆன்லைனிலேயே காதலிக்க தொடங்கி உள்ளோர்கள். தங்களது புகைப்படங்கள் உள்பட பல்வேறு விஷயங்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி உள்ளார்கள். ஒரு கட்டத்தில் மூர்த்தியை, திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக ரசீதா கூறியுள்ளார்.
அப்போது கோவையில் உள்ள ஒரு அழகு நிலையம் ஒன்றில் ரசீதா வேலை செய்து வந்துள்ளார். கோவையில் ரசீதா வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், மூர்த்திக்கு அடிக்கடி கோவைக்கு அழைப்பாராம். மூர்த்தியும் கோவைக்கு சென்று இருவரும் தனிமையில் காதலை வளர்த்து வந்திருக்கிறார்கள்
ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த மூர்த்தி, ரசீதாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டு ஓமலூர் பகுதியில் ஒரு வீட்டில் குடும்பம் நடத்தி உள்ளார் திடீரென ரசீதா மாயமான பிறகுதான், அவர் ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியது மூர்த்திக்கு தெரிய வந்திருக்கிறது.. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சேலம் போலீசில் மூர்த்தி புகார் அளித்துள்ளார்.
கோவையில் தனது ஆண் நண்பருடன் ரசீதா பதுங்கி இருக்கலாம் என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரது சமூக வலைதள பக்கங்களை கண்காணித்து வருகிறோம். தற்போது அனைத்தையும் ரசீதாவே முடக்கி வைத்துள்ளார். அவரது எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் ரசீதாவிற்கு நெருக்கமானவர்களை கண்காணித்துவருகிறோம்-
அழகு நிலையம் நடத்திவந்த அவருக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அவருடன், சமூக வலைதள பக்கங்களில் தொடர்பில் இருந்த நபர்களையும் கண்காணித்து வருகிறோம். இன்ஸ்டாகிராமில் அவரது காதல் வலையில் இதுவரை 3 பேர் ஏமாந்தது தெரிந்துள்ளது.
தற்போதைய நிலையில் ரசீதா இன்னும் சிலரை திருமணம் செய்து கொண்டு அவர்களிடமும் நகை, பணத்தை எடுத்து கொண்டு ஏமாற்றி இருக்கலாம் என நினைக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்னரே ரசீதா எத்தனை பேரை ஏமாற்றினார் என்பது தெரியும் என போலீசார் கூறினார்கள்.
இதனிடையே ரசீதா பேசுவதாக சில ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில் பேசும் ஆண், சேலத்தில் கார்த்திக் என்ற நபரையும் ரசீதா ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக உள்ளது. அந்த கார்த்திக் யார், என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications