ஏற்காட்டில் பரிதாபம்.. மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.. 2 பேர் உயிரிழப்பு!
சேலம்: சேலம் ஏற்காட்டில் 30 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையைச் சேர்ந்த சீரியல் படக் குழுவினர் கடந்த சில நாட்களாக ஏற்காடு மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று பிற்பகலில் ஏற்காடு அருகே உள்ள பக்கோடா பாய்ண்ட் என்ற பகுதியில் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தினர்.
இதனை தொடர்ந்து ஏற்காடு அருகே உள்ள பெலாத்தூர் என்ற பகுதியில் படப்பிடிப்பு நடத்த வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை ஈரோட்டை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டினார். வளைவான பகுதியில் சென்றபோது எதிரே லாரி ஒன்று வேகமாக வந்தது. இதனை அறிந்த டிரைவர் சங்கர் மெல்ல வேனை திருப்பினார் .

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய வேன், 30 அடி பள்ளத்தில் குப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் மதுரையை சேர்ந்த பாண்டியன்(41), மதுரையை சேர்ந்த சஞ்சய் (33) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேனில் இருந்த கௌரி சங்கர், பேச்சியப்பன் உள்ளிட்ட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். வேனின் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். மேலும் இது பற்றி தகவல் அறிந்ததும் ஏற்காடு காவல் துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி மற்றும் காவல் ஆய்வாளர் ரஜினி, காவல் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர் .
பின்னர் படுகாயமடைந்த 10 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாண்டியன் மற்றும் சஞ்சய் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications