சிகரெட் பிடிச்சிட்டே கீழே விழுந்த பெண்.. காதலனுடன் நைட் ஷோ போய்ட்டு.. சேலத்தில் நம்ப முடியாத சம்பவம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் பெருகி கொண்டே வருகின்றன.. அதிலும் நெஞ்சை பதற செய்யும் அளவுக்கு கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. தற்போது நடந்துள்ள இந்த பெண்ணின் கொலையும் அப்படித்தான் மாவட்டம் முழுவதும் அதிர்வலையை உண்டு பண்ணி வருகிறது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். என்ன நடந்தது இந்த பெண்ணுக்கு?
2 நாளைக்கு முன்புதான், 25 வயது இளைஞரின் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.. அதாவது, சேலம் இரும்பாலைக்கு சொந்தமாக 2000 ஏக்கர் நிலம் பயன்பாட்டில் இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இந்த இரும்பாலை அருகே சிட்டனூர் நிலத்தில்தான் மேற்கண்ட இளைஞரின் சடலம் தலை இல்லாமல் அழுகிப்போய் கிடந்தது.

இளைஞரை கொன்ற நண்பர்கள்
அந்த பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் இந்த சடலத்தை பார்த்து அலறியடித்து கொண்டு இரும்பாலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகுதான், கொலை செய்யப்பட்டவர், சேலம் இடங்கணசாலை பகுதியை சேர்ந்த 25 வயதான கௌதம் என்பதும், மது போதையில் தன்னுடைய அண்ணனை கொலை செய்துவிட்டு, சிறைசென்று சமீபத்தில் ஜாமீனில் வெளியானவர்
சம்பவத்தன்று நண்பர்கள் கௌதமன் மூர்த்தி, தனுஷ் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியபோது, நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து கௌதமை கல்லால் தாக்கி படுகொலை செய்தது விசாரணையில் புதிய திருப்பமாய் அமைந்தது...
நைட் ஷோ சென்ற பெண்
இந்நிலையில், சேலம் ராமகிருஷ்ணாரோடு பகுதியில் தங்கியிருந்த 34 வயது பாரதி மரணம் மர்மமான திருப்பத்தை எடுத்து வருகிறது...
பிஇ படித்தவர் பாரதி.. 34 வயதாகிறது.. திருமணமாகாதவர். இவரது அப்பா டெல்லி ஆறுமுகம்... இவர் அதிமுகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பிஇ பட்டதாரியான பாரதி, சங்கர் நகர் பகுதியில் டியூஷன் சென்டரில் பணியாற்றியும், அங்கேயும் தங்கியும் வந்தார்.
பாரதிக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் நாழிக்கல்பட்டியை சேர்ந்த 49 வயது உதயசரண். தனியார் மருத்துவமனையில் உயர்நிலை பொறுப்பில் இருக்கிறார் உதயசரண்.. சம்பவத்தன்று இரவு பாரதியுடன் நைட் ஷோக்கு சென்றிருந்தார்... அதன் பிறகு பாரதி தங்கிய ரூமுக்கு இருவருமே வந்துள்ளனர்.. அந்த ரூமிலேயே உதய சரணும் தங்கியிருக்கிறார்..
சிகரெட் பிடித்த பாரதி
அப்போது பாரதி சிகரெட் பிடித்தபடி மயங்கிவிட்டாராம். உடனடியாக உதயசரண் தான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு பாரதியை தூக்கி சென்றுள்ளார்.. ஆனால், பாரதி இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர்..
சிகரெட் பிடித்தபடி பாரதி எப்படி இறந்திருக்க முடியும் என்று, பாரதியின் உறவினர்களுக்கு சந்தேகம் கிளம்பியது.. இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் திரண்டு அரசு மருத்துவமனையின் முன் போராட்டம் நடத்தினர்.
மூக்கில் ரத்தம், நெஞ்சில் வீக்கம்
இப்படிப்பட்ட நேரத்தில்தான், பாரதியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதில், பாரதியின் மூக்கில் ரத்த காயமும், நெஞ்சில் வீக்கமும் இருப்பது தெரியவந்தது.. மேலும் இதனால் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.. இந்த ரிப்போர்ட்டை கண்டு அதிர்ந்த போலீஸ், இது சாதாரண மரணம் கிடையாது, என்பதை அறிந்து, உதயசரணை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
அப்போது உதயசரண் போலீசாரிடம் பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.. அதாவது அதாவது, பாரதிக்கும், உதயசரணுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது... பாரதி மது, சிகரெட் போன்றவற்றை பயன்படுத்தும் பழக்கம் உடையவராம்..
ரூமில் என்ன நடந்தது
சம்பவத்தன்று, சினிமாவுக்கு சென்றுவிட்டு ரூமுக்கு திரும்பியதுமே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் தாக்கியதாகவும் அதில் பாரதி இறந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்..
திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தொடர்ந்து பாரதி அழுத்தம் கொடுத்ததால் கோபத்தில் உதயசரண் அடித்திருக்கலாம் எனும் கோணத்திலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. மரணத்தின் காரணம் தெளிவாக வெளிவர, போலீசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மீது சேலம் முழுவதும் கவனம் திரும்பியுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications